2008ம் ஆண்டு மும்பை தாக்குதல்
இந்த நாட்டின் கொடூரங்களில் மறக்க முடியாதது 2008ம் ஆண்டு மும்பை தாக்குதல்.இந்தியாவின் வர்த்தக தலைநகரினை தகர்க்க வேண்டும் என்பது எதிரிகளின் தலையாய இலக்கு, அதைத்தான் அடிக்கடி முயற்சிப்பார்கள்இந்த தாக்குதல் எதிர்பாராதது என்றாலும், ரா முதலான அமைப்புகள் ரகசியமாக எச்சரித்தன எனினும் விதி எதிரிகளுக்கு வாய்ப்பாயிற்றுமீன்பிடி படகினை கடத்தி அதில் வந்த தீவிரவாத மிருங்கள் அதாவது ஆப்கன் கூலிபடை வந்த வேகத்தில் சுட்டதுஅவர்களின் திட்டம் பயங்கரமானது, தாஜ் ஹோட்டல் பயணிகளை பணையகைதியாக்குவது, நரிமண் பகுதியினை பிடித்து மிரட்டுவது என ஒரு பக்கம்இன்னொரு பக்கம் கண்ணில் படுபவர்களை எல்லாம் சுட்டு கொல்வதுகடும் தாக்குதலை தொடுத்தார்கள், முதலில் தேசமே திகைத்தது , மும்பை அலறியதுஆனால் போற்றுதலுக்குரிய காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுத்தார்கள், உயிருக்கு சிறிதும் அஞ்சாமல் போராடி நிலமையினை கட்டுபடுத்தினார்கள்கர்கரே போன்றவர்களின் தியாகத்தால் கசாப் என்பவனை உயிரோடு பிடிக்க முடிந்து அவன் பாகிஸ்தான் தயாரிப்பு என்பதை உலகிற்கு சொல்ல முடிந்ததுபெரும் பலிகள், ஏராளமான உயிரிழப்புகள் தாண்டி அந்த சதி முறியடிக்கபட்டதுஇந்தியாவின் கருப்பு நாட்கள் அவைநிச்சயம் கடல் பரப்பு நீண்ட இந்தியாவில் எங்கும் எங்களால் தாக்க முடியும் என இந்தியாவினை பதைபதைப்பில் வைக்க தொடுக்கபட்ட பெரும் தாக்குதல் அதுஆனால் இத்தேசம் அதை அனாசயமாக எதிர்கொண்டதுஇன்னொரு முறை அத்தகையான தாக்குதலை அவர்களால் நினைத்து கூட பார்க்க முடியவில்லைசிறிதும் பெரிதாக அவர்கள் திட்டமிட்டாலும் இந்தியாவில் அவர்களால் இப்பொழுது தாக்குதல் நடத்த முடியவில்லைபல நாடுகளுடனான நல்லுறவு, நல்ல உளவு, கடுமையான ரகசிய நடவடிக்கைகள் மூலம் இந்தியா பாதுகாப்பானதுஇதன் பின் இந்தியா கடும் இறுக்கமானது அதுவும் மோடி ஆட்சியில் இன்னும் அதிகமான பாதுகாப்புகள் வலுபடுத்தபட்டன, இதன் பின் ராணுவத்தார் மேல் புல்மாவாவில் தாக்குதல் நடத்தபட இந்தியா துணிந்து பாகிஸ்தான் காஷ்மீருக்குள்ளே சென்று தாக்கியதுஇப்பொழுது இம்மாதிரி தாக்குதல்களை வேரறுத்து காஷ்மீரையும் இந்தியாவோடு முழுக்க சேர்த்துவிட்டது இந்தியாஇந்தியாவினை மனரீதியாக, பொருளாதார ரீதியாக நொறுக்க அன்று பாகிஸ்தான் செய்த சதியினை எதிர்கொண்டு வென்றுவிட்டது தேசம்இத்தேசத்தின் பாதுகாப்பிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த அந்த அப்பாவி மக்களுக்கும், உயிர்கொடுத்து நாட்டை காத்த அந்த வீர காவலர்களுக்கும் வீரவணக்கம்அம்மக்களின் தியாகமே பெரும் தீவிரவாத தடுப்பு சட்டங்களை இந்தியா எடுக்க காரணமாயிற்றுஎன்.ஐ.ஏ அதன்பின்பே உருவாக்கபட்டு அதன் பின் இம்மாதிரியான தாக்குதல்கள் துடைத்தொழிக்க பட்டனதீவிரவாத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் பணியாது, வந்தே மாதரம்
