நேதாஜியுடன் பிரபாகரனை ஒப்பிடும் பதர்களை கண்டிக்கின்றோம்

நேதாஜியுடன் பிரபாகரனை ஒப்பிடும் பதர்களை கண்டிக்கின்றோம், இவர்கள் வெற்று மூளைக்காரர்கள்

ஆலய தீபமும் சுடுகாட்டு தீயும் நெருப்பு என்பதால் ஒன்றாகா..

நேதாஜி காந்திக்கு வெடிகுண்டு அனுப்பவில்லை, இந்தியா முழுக்க குண்டு வைக்கவில்லை. சர்ச்சிலுக்கு ஒரு குண்டு மவுண்ட் பாட்டனுக்கு ஒரு குண்டு என அனுப்பவில்லை

இந்தியாவில் நேதாஜியால் வெடித்த ஒரு குண்டு உண்டா? அவரால் கொல்லபட்ட ஒரு இந்திய தலைவனோ அப்பாவியோ உண்டா?

அப்படி செய்தால் நேதாஜி வரலாற்றில் நிலைத்திருக்க முடியுமா?

நேதாஜி அடுத்த நாட்டின் காடுகளில் இருந்து படைதிரட்டி இந்தியா நோக்கி வந்தார், அவரின் திட்டம் சரி, ஆனால் உலக நிலை அவருக்கு எதிராய் சதிசெய்தது

தான் தோற்க போகின்றோம் என்றவுடன் தன் படையினை கலைத்து எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பி எஞ்சியிருந்தோரை பத்திரமாக கரையேற்றிவிட்டு மரித்த மகான் அவர்

மக்களை பிடித்து கொண்டு நடுவில் அமரவில்லை

நேதஜி நினைத்திருந்தால் ரங்கூன் , பாங்காக் ஏன் சிட்டகாங் என ஒரு நகரை பிடித்து மக்களை பிடித்து கேடயமாக்கி தன் உயிரை காத்திருக்க முடியும், முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் அதைத்தான் முயற்சித்தான்

ஆனால் உத்தமர் நேதாஜி அதை செய்யவில்லை

நேதாஜி வேள்வி தீ, பிரபாகரன் மயான தீ. இருவரையும் ஒப்பிடவே முடியாது, ஒப்பிட்டு பார்ப்பவன் மனிதனாகவே இருக்க முடியாது