உலகில் சாவே இல்லாதவர் இருவர்

உலகில் சாவே இல்லாதவர் இருவர் ஒருவர் அனுமார் இன்னொருவர் பிரபாகரன்

அனுமார் அவர் பக்தர்களை காத்துகொண்டிருக்கின்றார், பிரபகனார் சொத்தும் பணவரவும் பிம்பமும் இவர்கள் அரசியலை காத்துகொண்டிருக்கின்றன‌

அனுமானுக்கு ராமன் வரம் கொடுத்துவிட்டு வைகுண்டம் சென்றுவிட்டார், பிரபாகரனுக்கு சாகா வரம் கொடுத்திருப்பது வைகோ, சைமன், பழ.நெடுமாறன் மற்றும் திருமுருகன் காந்தி

சரி பிரபாகரன் எங்கிருக்கின்றான் என்றால் அவன் வைகோ வீட்டு சமையலறை, சீமான் வீட்டு மொட்டைமாடி, நெடுமாறன் கார் டிக்கி மற்றும் திருமுருகன் வீட்டு செப்டிக் டேங் இவற்றில் மறைந்து மறைந்து வாழ்கின்றான்

இனி டெல்லியில் ஆட்சியே வேண்டாம் என இந்தியரும், கொழும்பில் அரசே வேண்டாம் என இலங்கையரும் முடிவெடுத்து ராணுவத்தை கலைக்கும் பொழுது சடாரென வெளிவந்து ஈழம் அமைப்பார்

அதற்கு 500 ஆண்டுகாலம் ஆனாலும் அவர் காத்தே இருப்பார், அட 500 என்ன 50 ஆயிரம் வருடமும் காத்தே இருப்பார் அவருக்குத்தான் சாவே கிடையாதே..

இவனுகளும் இவனுக பிரபாகரனும்..

லட்சம் மாவீரரை மண்ணுக்குள் புதைத்த பிரபாகரனுக்கு ஒரு அஞ்சலி இல்லை, ஆத்ம சாந்திக்கு ஒரு சடங்கு இல்லை என்பதுதான் அவன் செய்த பாவத்துக்கெல்லாம் சரியான தண்டனை