பிளாசி யுத்தம் அதுதான்
அந்த வங்கம் அன்று செழிப்பாய் இருந்தது, செழிப்பென்றால் அப்படி ஒரு செழிப்பு. எல்லா வகை நெல்லும் விளைந்தது, எல்லா வகை விளைச்சலும் இருந்தது
உலக நாடுகள் எல்லாம் தங்கள் வியாபாரிகளை அனுப்பி கப்பம் கட்டின
கங்கையும் வண்டல்மண்ணும் வங்கத்தை தங்கம் விளையும் மாநிலமாக ஆக்கியிருந்தன, அங்கொரு நவாப் இருந்தார், அவர் டெல்லிக்கு கட்டுபட்ட மன்னர் சைன் அகமது கான்
நாட்டை நிர்வகிக்க சொன்னால் எதிரிகளை ஒழிக்க சொன்னால் அவர் தன் மகனை கொண்டாட சொல்வதிலும், நாட்டு மக்களெல்லாம் தன் மகனை வணங்க வைப்பதிலுமே குறியாய் இருந்தார்
அக்காலத்தில் பிரெஞ்ச் ஆங்கில டச்சுபடைகள் கல்கத்தாவினை குறிவைத்து போரிட்டன
இன்று இவர்களுக்குள் அடிக்கும் அவர்கள் நாளை நம்மையும் அடிப்பார்கள் என்பதையெல்லாம் மன்னன் யோசிக்காமல் மகனின் மேல் குறியாய் இருந்தான்
மன்னன் திடீரென பொய்சேர அவரின் அனுபவமற்ற இளவல் அரசனானான்
அவனுக்கு ஆட்சியும் தெரியாது, நாட்டின் காவலும் தெரியாது போரும் தெரியாது வரலாறும் தெரியாது
தெரிந்ததெல்லாம் பவனிவருதல், ஆட்டம் பாட்டம், வணங்கி நிற்பவருக்கு பொற்கிழி வணங்க மறுப்பவருக்கு மிதி அப்படியே ராணுவ தளபதிக்கு மிதி
வேறு வழியினின்றி அவனை கொண்டாடியது வங்கம்
அப்பொழுதுதான் அங்கு வந்தான் ராபர்ட் கிளைவ், நாட்டின் நிலமையினையும் கொத்தடிமை தளபதி மீர் ஜாபரையும், அந்த வணிகன் ஓர்ச்ச்மென்டையும் கண்டான்
இவர்களெல்லாம் இந்த குட்டி நவாபுக்கு அஞ்சுகின்றார்கள் ஆனால் வாய்ப்பின்றி நிற்கின்றார்கள் என்பதை உணர்ந்தான், எல்லோரையும் சரிகட்டி யுத்த அறிவிப்பு செய்தான்
பிளாசி யுத்தம் அதுதான்
குட்டி நவாப் யுத்தத்திற்கு சென்றால் தளபதி ஓடிவிட்டான் இன்னும் ஏராள சொதப்பல், வெறும் இரு வீரர்களை மட்டும் இழந்து மொத்த வங்கத்தையும் கைபற்றினான் ராபர்ட் கிளைவ்
அந்த பிளாசி யுத்தத்தில் நாடு கைவிட்டு போகும்பொழுது பிறந்தநாள் என அரண்மனையில் கொண்டாடிகொண்டிருந்தான் சிராஜ் உத் தவுலா
அந்த உத்தவுலாவின் நினைவு உதயநிதியின் பிறந்தநாளன்று நினைவுக்கு வந்து தொலைக்கின்றது