அண்ணன் பயப்படவே இல்ல
ஒரு நாள் ஒரு புலி அவசரமா அமெரிக்கா போகணும், சிங்களன் ஏர்போர்ட் வழியா போக முடியாது இந்தியா விடாது, எல்லா தளபதிகளுக்கும் கடும் பயம், கடல்வழி போனாலும் உடனே போகமுடியாது அண்ணன் வச்சிருக்க அதிவேக படகிலும் 1 நாள் ஆகும், ஆனால் அரைமணி நேரத்துல அமெரிக்கா போகணும் எப்படி?
அண்ணன் பயப்படவே இல்ல சிரிச்சாரு, இதுக்காடா யோசிக்கங்க்ணு சொன்னாரு, சட்டுன்னு வான்படை தளபதிய கூப்பிட்டாரு காதுல ஏதோ சொல்லிட்டு மறுபடி சிரிச்சிட்டு பேப்பர் பார்த்துட்டு இருந்தாரு
நாங்க டிவி பாக்குறோம் இந்திய ராக்கெட் பறக்கபோகுதுங்குறான், இங்க புலிகள் விமானத்துல ஏறி வானத்துக்கு போறாங்க
இந்திய ராக்கெட் பறந்துட்டுன்னு அய்யா மன்மோகன் சிங் வாழ்த்துறாரு, வானத்துக்கு போன புலிகள் விமானம் வந்துட்டு , நாங்களும் திமிங்கல சூப் குடிச்சிட்டு இருக்கோம், ஒரு போன் அதுல “அண்ணே நான் அமெரிக்கா வந்துட்டேன் தலைவர்ட சொல்லிடுங்கண்ணு ஒரு குரல்”
இதெப்படிடா அதுக்குள்ள போனாருன்னா , அண்ணனோட திட்டம் அப்படி இருந்துருக்கு
இந்த புலிய விமானத்துல ஏத்தி பாராசூட் கட்டி என்ன பண்ணிட்டாரு இந்தியா ராக்கெட் ஸ்ரிகரிகோட்டாவில இருந்து கிளம்பிச்சி பாத்தியா அது வானத்துக்கு வரும்போது சரியா புலி விமானத்துல போய் அவன அதுல குதிக்க சொல்லியிருக்காரு, அதெல்லாம் அண்ணன் பயிற்சி
அந்த புலியும் சரியா விமானத்துல இருந்து ராக்கெட்டுக்கு குதிச்சிட்ட்டான், அப்புறம் என்னாகும் அவன்போக்குல இருந்திருக்கான் ராக்கெட் மேலே போயிட்டு
ஆனா கீழ பார்த்துட்டே இருந்தான், பூமி சுத்தும்ல அப்படி சுத்தும்போது அமெரிக்கா ராக்கெட்டுக்கு நேரே கீழ வரும்பொழுது பாராசூட்டை விரிச்சி குதிச்சிட்டான், எல்லாம் அரைமணி நேரத்துல
இப்படிதாண்டா உங்க நாடு ராக்கெட் விடுது, ஆனா பயணம் செய்றது பூரா நாங்கதா, இன்னும் அடிக்கடி விட சொல்லு பிளைட் செலவு மிச்சம்ண்ணாரு…”

புஹஹ்ஹ ஹ்ஹஹ ஹஹஹா ஹஹ