மாத்தையாவினை தன் கையாலே சுட்டுகொன்றான் பிரபாகரன்

மாத்தையா, அவரின் இயற்பெயர் மகேந்திர ராஜா. 1980களில் பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருந்தார்

அந்த இயக்கத்து தளபதிகளுக்கு ஒரு பலவீனம் இருந்தது அது 2009 வரை இருந்தது அதாவது பிரபாகரனுக்கு அடுத்து யார் எனும் போட்டி அது

அன்று பிரபாகரனுக்கு அடுத்து கிட்டு இருந்தான், கிட்டுவுக்கும் மாத்தையாவுக்கும் மோதல் நடந்த நிலையில்தான் கிட்டுவின் கால் போனது. அது அந்த இயக்கத்தின் உள்மோதல் என்பதால் பொத்திகொண்டிருந்தார்கள்

கிட்டு ஒரு சிங்கள வீரனின் காலை நல்லூர் கந்தசாமி கொவில் முன் தொங்கவிட்டிருந்தான், தன் வீரத்தை காட்டினானாம், இது தெய்வ நிந்தனை என்றதை அவன் செவிகொடுத்து கேட்கவில்லை

பின் அவன் காலே போனது தெய்வத்து தண்டனை

கிட்டுவின் கால் மாத்தையாவால் போனது அவனுக்கு கட்டளையிட்டது பிரபாகரன் என்பதெல்லாம் அக்கால செய்திகள்

மாத்தையா அதன் பின் பெரும் இடத்துக்கு சென்றான் யாழ்பாணம் அவன் கையில் இருந்தது, ஈழ மோதலில் அமைதிபடையுடன் மோதி பிரபாகரனை காத்தவன் அவனே

ஆனால் அவனுக்கு ஒரு பலவீனம் இருந்தது, சண்டை என்றால் சண்டை மாறாக அமைதிபடையினர் பேசினால் அதையும் கேட்பான்

அமைதிபடையினரும் இந்திய உளவுதுறையும் இதை வைத்து ஆடின, எல்லாம் பாரதத்தில் கண்ணன் நடத்திய நாடகமே

கண்ணன் விதுரனிடம் சாதாரணமாக பழகி அது துரியன் கண்ணில்படும் படி பார்த்துகொள்வான், துரியன் கொள்ளும் சந்தேகத்தில் விதுரர் வெளியேறுவார், பலமிக்க விதுரரை அப்படி பிரிப்பான் கண்ணன்

இதையே இந்தியா செய்தது மாத்தையாவுடன் சகஜமாக பழகினார்கள் அவனும் அமைதிபடையினை நோட்டம் விட பழகினான் ஆனால் இந்த பழகலை பிரபாகரனுக்கு இந்திய தரப்பே போட்டு கொடுத்தது

கிட்டு இதை கொண்டு மாத்தையாவினை பழிவாங்க எண்ணினான், பிரபாகரனை கொல்ல ரா முயற்சித்ததாகவும் பிரபாகரன் காரில் குண்டு வைத்ததாகவும் குற்றசாட்டு கூறபட்டது

இக்காலகட்டத்தில் ராஜிவ் கொலை என அமளிதுமளி இருந்ததால் இவை எல்லாம் மெல்லதான் கசிந்தன‌

சந்தேக பிராணியான பிரபாகரன் மாத்தையாவினை சிறை வைத்தான் பின் மாத்தையா படையினர் 300 பேரோடு அவனை கொன்றான் பிரபாகரன்

மாத்தையாவினை தன் கையாலே சுட்டுகொன்றான் பிரபாகரன், இவ்வளவுக்கும் பலமுறை பிரபாகரன் உயிரை காத்தவன் மாத்தையா

300 வீரர்களுடன் மாத்தையா செத்தான், ஆம் அவர்களும் தமிழர்கள். பிரபாகரன் தமிழரை கொல்ல லைசென்ஸ் உண்டு அல்லவா?

மாத்தையா போனபின்பு அந்த இடத்துக்கு வந்தவனே கருணா, அவனுக்கும் பிரபாகரனுக்கும் 2005ல் முட்டியது

ஒருகட்டத்தில் மாத்தையா மாதிரியும் எனக்கு துரோகம் இழைக்கின்றாய் நேரில் வா என பிரபாகரன் சொல்ல 2006ல் கருணாவுக்கு வியர்த்தது உண்மை புரிந்தது

அவன் இந்திய உளவுதுறையிடம் சரணடைந்தான், இந்தியா அவனை நம்பாமல் கோத்தபயாவிடம் ஒப்படைத்தது அதன் பின் நடந்த யுத்ததில் பிரபாகரன் கொல்லபட்டு கருணா அடையாளம் காட்டினான்

மாத்தையா கொல்லபட்ட விதமே கருணாவினை காப்பாற்றி பிரபாகரனை ஒழித்துகட்டியது

மாத்தையா நல்லவன், அவனை கொன்ற பாவம் கருணா வடிவில் திரும்ப வந்து பிரபாகரனை ஒழித்துகட்டியது என்பதுதான் தெய்வத்தின் தீர்ப்பாகவே இருந்தது