சீமானை முழுக்க பொய் எனவும் சொல்லமுடியாது

சீமானை முழுக்க பொய் எனவும் சொல்லமுடியாது வரலாறு பிரபாகரனை அப்படித்தான் சொல்கின்றது

உதாரணம் ராமசந்திரனை சந்திக்க ரமாவரம் தோட்டத்துக்கு பாலசிங்கம், பிரபாகரனும் வருகின்றார்கள் , அது காலை 8 மணி

இந்திய பயிற்சிக்கு வரமறுக்கும் பிரபாகரனை இழுக்கும் அசைன்மென்ட் இந்திராவால் ராம்சந்தருக்கு கொடுக்கபடுகின்றது, அவர் இருவரையும் காலை உணவுக்கு அழைக்கின்றார்

ராம்சந்தர் சாப்பிடுகின்றார், ஆண்டன் பாலசிங்கம் நாகரீகம் கருதி தயங்குகின்றார். பாலசிங்கத்தை பார்த்து கண்ணை காட்டுகின்றார் ராம்சந்தர், ஆம் ஆளுக்கு முன்பாக பூரி பொங்கல் இட்லி என வைத்து விளாசுகின்றான் பிரபாகரன்

புலவர் புலமைபித்தன் ஒரு இடத்தில் பிரபாகரனுக்கு கணவாய் பொறியல் பிடிக்கும் என தன் மனைவி அடிக்கடி சமைத்ததாக பதிவு செய்கின்றார்

அட திருமா, அவர் ஈழம் சென்றபொழுது கோழிகறியினை ஊட்டியதாகவும் இவர் நான் சைவம் அண்ணா என மறுத்ததாகவும் அட சைவ சிறுத்தையோ என அவர் சிரித்ததாகவும் திருமாவே சொன்னார்

சிங்க இறால் மீனை கதற கதற எனக்கு ஊட்டி அழகுபார்த்தான் பிரபாகரன் என்பது ஜெகஸ்கஸ்பரின் செய்தி

சந்திரிகா காலத்து கொடுமைகளை கேட்டால் அப்பொழுது தேங்காய் இல்லை, காய்கறி தட்டுபாடு என தலைவர் கவலைகொண்டார் அதனால் அப்பொழுதெல்லாம் மீன் மட்டும் உணவு என்றவர் தமிழ்செல்வன்

கப்பல் நிறைய உடும்பு என்பது பிரத்யோகமான செய்தி

முன்னாள் போராளியிடம் கேட்டால் பயிறு அவிக்கும் பொழுது சட்டி உடைந்தால் கூட அடுப்பில் இருக்கும் பயிறை ஊதிதின்பான் பிரபாகரன் என அதிரவைக்கின்றார்

எவனை கேட்டாலும் பிரபாகரன் நன்றாக‌ உண்டு தின்ற வரி கண்டிப்பாய் பலமுறை வந்து விழுகின்றது..

ஆக தின்பதற்கு ஒரு இயக்கம் நடத்தியிருக்கின்றார் பிரபாகரன், பொழுது போக்கிற்கு போராட்டம் அரசியல் கொலை
என எதையோ செய்திருப்பார் போல..