மாவீரர்நாள் கொண்டாட இலங்கையில் தடை இல்லை
பெரும் அழிச்சாட்டியம் செய்யலாம் என காத்திருந்த தமிழக ஈழ கோஷ்டிகள் கணவில் பத்து கப்பல் நிறைய மண் அள்ளிபோட்டுவிட்டார் கோத்தபாய
ஆம் மாவீரர்நாள் கொண்டாட இலங்கையில் தடை இல்லை என சொல்லிவிட்டார் வாழ்த்து மட்டும் சொல்லவில்லை
நாட்டின் பாதுகாப்புக்கு இடைஞ்சல் இல்லாமல் எதுவும் செய்யுங்கள் என அவர் சொல்லிவிட இலங்கை முழுக்க மாவீரர் தினம் அனுசரிக்கபட்டது
நிச்சயம் அந்த நாடு அவரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது, எதிர்ப்பவர் எவருமிலர் இதனால் அவர் நினைத்திருந்தால் அதற்கு தடை விதித்திருக்கலாம்
ஆனால் அவர் அப்படி செய்யவில்லை, இந்நிகழ்வால் ஒன்றும் ஆகபோவதில்லை ஏன் வீணான சர்ச்சை என கருதிவிட்டார்
நாம் முன்பே சொன்னபடி ஈழபோராளி என்பதை விட இலங்கையனாக பிரபாகரன் இலங்கைக்கு செய்த சேவைகள் மிக அதிகம் என்பதாலும் கோத்தபாய அதிபராக அவனே காரணம் என்பதாலும் விரைவில் அவன் சிலை கொழும்பில் திறந்தாலும் ஆச்சரியம் ஒன்றுமில்லை
ஆக மாவீரர் தினத்தில் தடைவிதிப்பார் கலவரம் வந்து 10 பேர் சாவார்கள் என எதிர்பார்த்திருந்த தமிழக கோஷ்டிகள் ஆத்திரத்தில் அழதுகொண்டிருக்கின்றன
அந்த கோபத்தோடு டெல்லிவரும் கோத்தபாயாவினை கோ பேக் என அழுதுகொண்டே சொல்லி கொண்டிருக்கின்றார்கள்..