முடிவு எல்லோருக்கும் தெரிந்தது

முள்ளிவாய்க்காலில் மே 17,2009 அன்று இலங்கை ராணுவமுகாமில் அமர்ந்திருந்தான் பிரபாகரன் அவன் முன்பு ஜெனரல் டயஸ் அமர்ந்து விசாரித்து கொண்டிருந்தான், முடிவு எல்லோருக்கும் தெரிந்தது

எனினும் புலிகளின் ஆயுத குடோன், அடுத்தகட்ட தலமை, சர்வதேச தொடர்பு என பல தகவல்களை பெற கடும் முயற்சியில் விசாரித்துகொண்டிருந்தான் டயஸ்

பிரபாகரன் பேசவே இல்லை

கடுமையான சித்திரவதைக்கு பின் சாவது உறுதி என தெரிந்தபின் பேச தயாரானான், டயசும் மற்ற தளபதிகளும் ஆர்வமாய் சுற்றி நின்றனர், 40 வருட தேடல் அது

பேச தொடங்கினான் பிரபாகரன் “நான் 12 வயசுல சாக வேண்டியவன், 20 வயசுல பஸ்தியான் பிள்ளை, 25 வயசுல குட்டிமணி, 30 வயசுல அமைதிபடை, 40 வயசுல 45 வயசுல சந்திரிகா, 50 வயசுல இந்திய ரா என எவ்வளவு முயற்சி.. எவ்வளவு ஆபத்தில தப்பிச்சவன். ஒரு சக்தி என்னை அப்படி காப்பத்திச்சு அது எது தெரியுமா?”

மறுபடியும் ஆர்மி தரப்பு பரபரப்புடன் கேட்க தயாரானது

“சீமானுக்கு ஆமைகறியும், கணவாய் பொறியலும் என் கையால் ஊட்டிவிடும் வரை சாவே கிடையாதுண்ணு அன்றைக்கே எம்ஜிஆர் சொன்னவர்”

இதை கேட்டதும் ஆத்திரத்தில் கோடாரி எடுத்து அவன் தலையில் கொத்தினான் டயஸ்

“பங்கருக்குள்ளே சோறும், நண்டு குழம்பும், இறால் வறுவலும் இருக்கு. என் தம்பி சீமானிடம் சேர்த்திருங்கோ..” என சொல்லியபடியே அந்த விடுதலை வீரனின் உயிர் பிரிந்தது