இது கிறிஸ்தவ சதி என்கின்றது நித்தி கோஷ்டி

நித்திசாமியின் இந்து ஆன்மீகத்தை நொறுக்க வெள்ளையன் சதி செய்கின்றான், அவனால் ஊடுருவபட்ட அமெரிக்க கிறிஸ்தவபெண்ணே சர்ச்சை செய்கின்றாள் இது கிறிஸ்தவ சதி என்கின்றது நித்தி கோஷ்டி

அம்மணியிடம் டாலர் டாலராக கறக்கும் பொழுதும், அவள் மூலம் அமெரிக்காவில் கம்பெனி திறக்கும் பொழுதும் நித்தி கோஷ்டி என்ன செய்தது என நாம் கேட்க கூடாது

அறிவியலும் ஆன்மீகமும் மனவியலும் கலந்தது இந்துமதம் என உணர்ந்து சொல்லி அதை தழுவினாள் அன்னிபெசன்ட்

விவேகானந்தரின் ஞானத்தில் மயங்கினாள் பிரிட்டிஷ் பெண் சுவாமி உங்களை போல ஒரு மகன் பிறக்க எனக்கு பிள்ளைவரம் வேண்டும் என வெட்கத்தை விட்டு கேட்டாள்

விவேகானந்தர் சொன்னார் “அம்மா, என்னை உன் மகனாக தத்தெடுத்துகொள், இந்து துறவிக்கு காணும் பெண் எல்லாம் தாய் அம்மா”

கண்ணீரோடு அவர்காலில் விழுந்து சிஷ்யையானாள் அவள், அவள்தான் சகோதரி நிவேதிதா

நல்ல இந்து துறவி என்றால் அதுதான் செய்யவேண்டும் , விவேகானந்தர் அதை சரியாக செய்தார், நிவேதிதா அந்த இடத்திலே ஞானம் பெற்றாள்.

நித்தி ஒரு பிராடு, அவரோடு வந்து சேர்ந்த வெள்ளைகாரி இன்னொரு பிராடு இரண்டும் சேர்ந்தால் என்னாகும்

இப்படித்தான் ஆகும்…