இவர்கள் உருப்படியாக இருந்தால் ஏன் ஆட்சி அதிமுக பக்கம் செல்கின்றது
திமுக தமிழகத்தை ஆண்டது 1967 முதல் 1975 வரை 8 வருடம், அதன் பின் 1988 முதல் 1989 வரை 1.5 வருடம், அதன் பின் 1996 முதல் 2001 கடைசியாக 2006 முதல் 2011 வரை
ஆக 19.5 வருடம் ஆண்டிருக்கின்றார்கள், இதில் அண்ணா ஆண்ட காலம் கொஞ்சம் பரவாயில்லை இந்த மதுக்கடை இல்லை இன்னும் பல இல்லை. காமராஜருக்கு பின் ஆண்டதால் மனசாட்சி இருந்ததது
அதன் பின் தமிழகத்துக்கு பிடித்தது சனி , அந்த 1972க்கு பின் ராம் சந்தர் பிரிந்தபின் அவரை சமாளிக்க பெரும்பாடுபட்ட திமுக தலமை ஆட்சியில் கோட்டை விட்டது, அடுத்த 3 ஆண்டுகள் தடுமாற்றம்
சரி 1988ல் வந்து என்ன செய்தார்கள்? ஈழ விவகாரம் அமைதிபடை மண்ணாங்கட்டி புலி ஆதரவு அத்தோடு டிஸ்மிஸ்
1996 முதல் 2001 வரையான காலகட்டம் ஓரளவு சொல்லலாம் ஆனால் அந்த காலகட்டமே திமுகவின் வாரிசு அரசியல் புகுந்த கொடுங்காலம், அப்பொழுதும் ஜெயலலிதாவினை ஒழிக்க , மூப்பனாரை நசுக்க வாய்ப்பு தேடிய அளவு தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக நல்லது தேடவில்லை
2006 முதல் 2011 வரையிலான ஆட்சி உங்களுக்கே தெரியும், கருணாநிதியின் கடைசி காலம் என்பதால் தளர்ந்திருந்தார், வாரிசுகளும் கட்சிக்காரனும் போட்ட ஆட்டம் கொஞ்சமல்ல
அனுதினமும் பாராட்டுவிழா கவியரங்கம் என அவர் நடுவில் அமர்ந்திருக்க அவரை சுற்றி ஒரே கும்மியும் பாடல்களுமாக காலம் கடந்தது, திமுகவினரின் சுரண்டல் கொஞ்சமல்ல
விளைவு ஆட்சியினை ஜெயா தட்டினார், அவரும் ஊழல்வாதிதான் ஆனால் கருணாநிதிக்கு அவர் பரவாயில்லை எனும் சொல்லும் அளவு மக்கள் தீர்ப்பு இருந்தது
இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய விஷயம் சுமார் 15 வருட காலம் திமுக மத்தியில் இருந்தது, அதிமுகவுக்கு அந்த வாய்ப்பு இல்லை
சரி மத்தியில் 15 வருடகாலம் இருந்த திமுக, தமிழ்நாட்டுக்கு என்ன கொண்டுவந்தது என்றால் ஒன்றுமே இல்லை
காவேரி, கச்சதீவு, அண்வுலை, மீத்தேன், ஈழம் உட்பட எதாவது ஒரு மத்திய அரசால் தீர்க்கபடும் விஷயங்களை தீர்த்தார்களா என்றால் இல்லை
மாறாக திமுகவினருக்கு புது புது லைசென்ஸ்கள் கிடைத்தன, அவர்களின் பணம் உலகெல்லாம் குவிக்கபட்டது
சரி விஷயத்துக்கு வரலாம் திமுக ஆண்ட அந்த 19.5 வருடத்தில் கடைசி 5 வருடம் அலங்கோலமானது, ஆக 13.5 வருடம்
இதில் 1.5 வருடம் ஈழ கூத்தும், புலி ஆதரவும், ராஜிவ் கொலையும் பத்மநாபா கொலையுமாக நடந்த கொடுங்காலம், ஆக 12
இந்த 12 வருட ஆட்சிதான் தமிழகத்தையே புரட்டி போட்டு பாலாறும் தேனாறும் ஓடும் அளவு ஆக்கி வைத்திருக்கின்றதாம், உடன்பிறப்புக்கள் சொல்லிகொள்கின்றன
நம்புங்கள்
இவர்கள் உருப்படியாக இருந்தால் ஏன் ஆட்சி அதிமுக பக்கம் செல்கின்றது
உண்மையில் இவர்கள் திமுகவினை இழுத்து தெருவில் விடுகின்றார்கள், இவர்கள் இப்படி சொல்ல சொல்ல திமுகவினை எதிர்த்ததால் அதிமுகவுக்கு மக்கள் கிட்டதட்ட 30 வருடம் ஆட்சி கொடுத்தார்கள்
திமுக ஆண்ட அந்த 19 வருடத்தை விட அதிமுக ஆண்ட இந்த 30 வருடத்திலே தமிழகம் முன்னேறிற்று என கிளம்புவார்கள்
ஆக அதிமுக ஆண்ட 30 வருடமே தமிழக முன்னேற்றத்துக்கான காரணம் என சொல்லி தங்களின் தோல்வியினை தாங்களே ஒப்புகொள்ள தலைகொடுத்து நிற்கின்றது உடன்பிறப்பு கோஷ்டி
வர வர இவை தும்பிகளை விட மோசமாக பேச தொடங்கிவிட்டதுதான் சோகம்..