ஆசிரமத்தில் அரசியல் கலந்தால் இப்படித்தான்
காவேரி விவகாரம் முடிந்ததாலும் காவேரியில் நீர்வரத்துக்கு சிக்கல் இல்லை என்பதாலும் சோர்ந்து போயிருந்த கன்னட கோஷ்டிகள் கடும் உற்சாகத்துடன் புதிய போர்கோலம் பூண்டுவிட்டன
ஆம் இம்முறை அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருப்பவர் நித்தி சாமி
கிராபிக்ஸ் நித்திக்கு கன்னடத்தில் இடமில்லை என பெரும் போராட்டம் வெடித்துவிட்டது, சாமியும் சும்மா இருக்காமல் மேற்கிந்திய தீவில் இருந்து வீடியோ போட்டு வெறுப்பேற்றுகின்றார்
தன் வழக்கமான மந்தகாச புன்னகையினை வீசியபடி அவர் பதில் வீடியோ அனுப்பி இவர்களை வெறுப்பேற்ற இவர்கள் மறுபடி நித்தி படத்தை எரிக்க விவகாரம் பெரிதாகின்றது
நித்தி தன் வழக்கமான சிரிப்பில் இருந்து கொஞ்சம் சீரியசாகி தன் ஆன்மீகம் எப்படியும் வளரும் என்றும் இந்தியா பற்றி தனக்கு கவலை இல்லை என்றும் உளறிவிட்டார், பின் வார்த்தையினை வாபஸ் வாங்கினார்
ஆனால் இந்தியா பற்றி தனக்கு கவலை இல்லை என அவர் சொன்னதை பிடித்த கோஷ்டிகள் ஆண்டி இந்தியன் நித்தி என கத்திகொண்டிருக்கின்றன
இன்று இன்னும் நித்தியின் வீடியோ வெளிவரவில்லை அது வெளிவந்தபின் அடுத்த காட்சி அரங்கேறும்
விரைவில் நித்தியின் பிடாடி ஆசிரமத்தார் பிடரியில் அடிபட ஓடிவருவார்கள் என்பது போலவே காட்சிகள் நடக்கின்றன
விஷயம் வேறொன்றுமில்லை முந்தைய காங்கிரஸ் அரசுக்கும் நித்திக்கும் ஏதோ ரகசிய ஒப்பந்தமும் ரகசிய காப்பு பிரமாணமும் நடந்திருக்கின்றது, பாஜக அரசு அதை கேட்டு விரட்டி விரட்டி அடிக்கின்றது , இதனால் நித்திக்கு எதிராக முணுமுணுத்துகொண்டிருந்தவர்கள் எல்லாம் பகிரங்கமாக வந்து நிற்கின்றார்கள்
இதுதான் நிஜம்
ஆசிரமத்தில் அரசியல் கலந்தால் இப்படித்தான்