டெல்லிக்கு வந்திருக்கின்றார் கோத்தபாய ராஜபக்சே
டெல்லிக்கு வந்திருக்கின்றார் கோத்தபாய ராஜபக்சே, இங்கு ஈழ கோஷ்டிகள் ஏய் ங்கோத்தா என ஒப்பாரி வைத்தாலும் டெல்லியில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கபட்டுள்ளது
இந்தியா மிக ராஜதந்திரமாக முன்னாள் தள்பதி வி.கே சிங் மூலம் இலங்கை ராணுவத்தை கையில் வைத்திருக்கும் கோத்தபாயாவுக்கு வரவேற்பு கொடுத்தது, இன்று அவர் மோடி உட்பட பல முக்கியஸ்தர்களை சந்திப்பார்
பதவி ஏற்றதும் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்க்கு வந்திருப்பது கோத்தபாய இந்தியாவினை பகைக்க விரும்பவில்லை என்பதை காட்டுகின்றது
ஒருவேளை தமிழக ஈழ கோஷ்டிகளை வெறுப்பேற்ற வந்திருப்பாரோ என்னமோ
2009ல் யுத்தம் நடந்தபொழுது கோத்தபாய பாதுகாப்பு ஆலோசகர் முன்னாள் அதிபர் மைத்ரிபால பாதுகாப்பு அமைச்சர்
அந்த மைத்திரி பால அதிபராக வந்தபொழுது இங்கு சத்தமே இல்லை ஆனால் கோத்தபாய வந்திருக்கும் பொழுது ஏதோ தெறிக்க அலறுகின்றார்கள் என்றால் பைத்தியகாரதனமாக இல்லை
இதனால்தான் சரத் பொன்சேகா 2007லே சொன்னான் “தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள், அவர்களை டெல்லியும் உலகமும் கண்டுகொள்ளவே செய்யாது”
