சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்
மகராஷ்ட்ராவில் புதிய அரசு அமைந்ததும் மிக மகிழ்ச்சியில் இருப்பது சிவசேனாவோ சரத்பவாரோ அல்ல சவுதி அரேபியா
கிட்டதட்ட 65 பில்லியன் டாலர் எண்ணெய் நிலையத்தை அது இந்தியாவில் அமைக்க வந்தது, மத்திய அரசு மகராஷ்ட்ரத்தை கைகாட்டியது ஆனால் நிலம் ஒதுக்க வேண்டிய மகராஷ்ட்ர அரசு குழப்பத்தில் சிக்கியது
இனி புதிய முதல்வர் நிலம் ஒதுக்குவார் விரைவில் வேலையினை தொடங்கலாம் என வருகின்றது சவுதி
புதிய முதல்வர் கூட்டணி குழப்பத்தை தீர்ப்பாரா? இல்லை சவுதி கம்பெனியினை கவனிப்பாரா என்பது தெரியவில்லை, ஒருவேளை சவுதி கம்பெனி வெயிட்டிங்கில் இருந்தால் என்னாகும்?
தமிழ்நாட்டின் முக ஸ்டாலின் அந்த 65 பில்லியன் முதலீட்டை தமிழ்நாட்டுக்கு இழுத்து வந்துவிட மாட்டாரா என்ன? இப்பொழுதெல்லாம் அவருக்க்கும் மும்பை சிவசேனாவுக்கும் நட்பு அதிகம்
கவனித்தீர்களா?
அக்கட்சி பெயர் சிவசேனா, அது ராமர் கோவில் முதல் பல விவகாரங்களை கொள்கையாய் கொண்ட இந்து கட்சி, ஒருவகை இஸ்லாமிய எதிர்ப்பு கட்சி
ஆனால் திமுக பகுத்தறிவு கட்சி, இந்துமதம் அதற்கு ஆகாது. இஸ்லாமியர் அவர்களின் பக்கபலம்
சிவனின் சேனை என கிளம்பும் கட்சிக்கும், கடவுள் இல்லை சிவபெருமான் என ஒரு பயல் இல்லை என சொன்ன பெரியாரின் வழிதோன்றல் கட்சிக்கும் எப்படி பொருந்தும்?
ஆனால் இருவரும் இணைந்து சிரிக்கின்றார்கள். இதனால் சிவசேனாவுக்கு சிக்கல் இல்லை
மாறாக தமிழக இஸ்லாமியருக்கு ஒருவித அதிருப்தி எழுந்திருக்கின்றது
மசூதி இடிப்பிலும், மும்பை கலவரத்திலும் சிவசேனாவின் பங்கு உண்டு, அது எந்நாளும் இஸ்லாமியருக்கு வலி
இன்னொரு வகையில் மும்பை தமிழரை அன்றிலிருந்தே வெறுப்புடன் பார்க்கும் கட்சி சிவசேனா
அந்த சிவசேனையிடம் வலிய சென்று நிற்கின்றது திமுக…

இதுபற்றி திமுகவினரிடம் கேட்டால் “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” எழுதினார் அண்ணா அதில் கருணாநிதி கைதட்டினார், பெரியார் ரசித்தார்.
அதனால் திமுகவின் சிவாஜி கண்ட இந்து ராஜ்யமும், சிவாஜியின் படையான சிவசேனாவின் வாரிசான இக்கட்சியும் கொள்கையால் ஒன்று என சிரிக்காமல் சொல்வார்கள்