மசூதி இடித்ததை பகிரங்கமாக ஒப்புகொண்ட கட்சி அது

மசூதி இடித்த கட்சி என பாஜகவினை மட்டும் சொல்லமுடியாது, சிவசேனா அதற்கு துணையாக இருந்தது

மசூதி இடித்ததை பகிரங்கமாக ஒப்புகொண்ட கட்சி அது

அது தொடக்கத்தில் செய்த தமிழர் அரசியலை விட கொடுமையான காலம் மும்பை கலவர காலங்கள், அதில் குற்றம்சாட்டபட்ட கட்சி சிவசேனா

தாவுத் இப்ராஹிம் கோஷ்டியின் ஹிட்லிஸ்டில் இருந்தவர் பால் தாக்கரே, இன்றும் தாக்கரே குடும்பத்துக்கு அந்த அச்சுறுத்தல் உண்டு

சிவசேனாவின் அரசியலே ராமர்கோவிலும் பாகிஸ்தான் எதிர்ப்புமே, அதன் அடிநாதமே இந்துத்வா

இப்பொழுது திமுக சிவசேனாவோடு கைகோர்க்கின்றது, இனி என்னாகும்?

அந்த கண்கொள்ளா காட்சி நடக்கும்

ஆம், ராமர் கோவிலுக்கு திமுக சிலகோடி நன்கொடை வழங்கும், மேற்கொண்டு திமுகவினர் கரசேகவர்களாக செல்வார்கள்

ராமர்கோவில் ரதம் அறிவாலயத்துக்கு வரும், அப்படியே கோபாலபுரத்துக்கு செல்லும் துர்கா ஸ்டாலினும் வரவேற்று நன்கொடை வழங்குவார்

கம்ப ராமாயணத்தில் ஒரு பாடல் உண்டு, அது இப்படி வரும்

“குகனோடும் ஐவரானோம் முன்பு குன்று சூழ்வான்
மகனொடும் அறுவரானோம் எம்முழை அன்பின் வந்த
அகனமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனோம்
புகலரும் கானம் தந்த புதல்வரால் பொழிந்தான் உந்தை”

அதன் பொருள் இது

“விபீஷணா! முதலில் நாங்கள் சகோதரர்கள் நால்வராயிருந்தோம். பின்னர் குகனோடு சேர்ந்து ஐவரானோம். சுக்ரீவன் எஙகளுடன்சேர்ந்ததும் அறுவரானோம். இப்போது உன்னோடு சேர்ந்து ஏழு பேர்களாகி விட்டோம்.” என்றான்.

ஆக ராமருக்காக பாஜக தனியாய் இருந்தது, அது சிவசேனாவோடு இருவரானது, சங் பரிவார் கோஷ்டிகளோடு மூவரானது, ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு நால்வரானது

இனி திமுகவோடு ஐவராகின்றது

ஆக “கோபாலபுரத்து கோமானின் மகனோடு ஐவரானோம்” எனும் காலம் நெருங்குகின்றது.

இனியும் என்ன தாமதம், ராமர் கோவிலை கட்ட தொடங்கினால்தான் என்ன?

ராமர் பாவம், அவர் இன்ஜினியரிங் காலேஜில் எல்லாம் படிக்கவில்லை

அதனால் என்ன கருணாநிதி மகனிடம் சொன்னால் ராமர் கோவிலுக்கு ஆயிரம் இன்ஜினியரை அனுப்பிவிடமாட்டாரா என்ன?