ஒருவிஷயம் உண்மை
ஐடி முடக்கபட்டது என சொல்லி இன்னொரு அடி திறந்தால் ஆயிரகணக்கான நண்பர்கள் அங்கும் வந்துவிட்டார்கள்.
நிச்சயம் நம்மிடம் ஏதோ எதிர்பார்கின்றார்கள். எதையோ இவன் உருப்படியாக சொல்கின்றான் என நம்புகின்றார்கள். அவர்களின் எதிர்ப்பார்ப்பை நினைத்தால் மனம் பதைபதைக்கின்றது
தேவையில்லாமல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்திவிட்டோமோ என்றெல்லாம் கூட யோசனை வருகின்றது, ஆனால் இவ்வளவு ஆயிரம் பேர் வந்து நிற்கின்றார்கள் என்றால் நம்மை நம்புகின்றார்கள் என்பது தெரிகின்றது.
நாம் எழுதுவது அவர்களை எதையோ உணர வைக்கின்றது, தேட வைக்கின்றது அதற்காக வருகின்றார்கள். நன்றி
ஒருவிஷயம் உண்மை
இனி எழுதுவதை நிறுத்தமுடியாது, நிறுத்தினால் கட்டி வைத்து, கல்லால் அடித்து இழுத்து போட்டு உதைத்து எழுத வைப்பார்கள் என்பது மட்டும் புரிகின்றது