ஒரே கடவுள் என அறிவது சாத்தியமா?

கிறிஸ்தவருக்கு ஒரே தெய்வம், இஸ்லாமியருக்கு ஒரே தெய்வம் ஆனால் இந்துக்களுக்கு அப்படி அல்ல அங்கு ஏகபட்ட தெய்வம் குளறுபடிகள் உண்டு என்பது போல ஆ.ராசா என்பவர் பேசியதாக ஒரு தகவல் சுற்றுகின்றது.

ஆ.ராசா திகாரில் இருக்கும்பொழுது வந்த பத்திரிகை செய்திகள் ஏராளம், அதிலொன்று பல பெண்குழந்தைகளுக்கு பின் ஆண்குழந்தை வேண்டி ஆண்டிமுத்து என்பவர் தன் குலசாமிக்கு தவமிருந்து கடைசியாக ராசாவினை பெற்றதாகவும், அவர் பெரும் பதவிகளை அடைவார் என சாமி சொன்னதாகவும் தகவல் உண்டு

ஆனால் ராசா திகாருக்கு செல்வதை சாமி சொல்லவில்லை, விஷயம் அதுவல்ல ராசா குடும்பம் பக்தி மிக்க இந்து குடும்பம் என்பதை மட்டும் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்

சரி விஷயத்துக்கு வரலாம், கிறிஸ்தவமும் இந்துவும் ஏக கடவுளை வலியுறுத்துகின்றன, புத்தம் கடவுளையே காட்டாது தத்துவங்களை மட்டும் போதிக்கும்

ஆனால் இந்துமதத்தில் மட்டும் ஏன் இத்தனை தெய்வங்கள்?

விஷயம் இல்லாமல் இல்லை , கிறிஸ்தவம் பிதா சுதன் பரிசுத்த ஆவி என சொல்லி மூவொரு கடவுளை சொல்லும், ஆழமாக கிறிஸ்துவத்தை நோக்கினால் கடவுளின் பண்புகள், பலம், குணநலம் என ஏராளம் சொல்லும்

சமணம் எட்டுவகை குணத்தோன் என சொல்லும்

இந்துமதம் கிறிஸ்தவம் சொல்லும் பிதா சுதன் பரிசுத்த ஆவி என்பதை பிரம்மா விஷ்ணு சிவன் என சொல்லும், அங்கு பிரம்மனுக்கு கோவில் கிடையாது இங்கு பிதாவுக்கு ஆலயம் கிடையாது அங்கு பரிசுத்த ஆவி அக்னிவடிவம் இங்கு சிவன் அக்னிவடிவம், இன்னும் தொடர்புகள் ஏராளம்

இங்கு ஏன் ஏகபட்ட கடவுள்கள்?

கடவுளுக்கு ஏகபட்ட குணங்கள் உண்டல்லவா? இந்துமதம் கடவுளின் ஒவ்வொரு குணத்தையும் அதாவது அவரின் ஒவ்வொரு செயல்பாட்டையும் மனிதனுக்கு விளக்க ஒவ்வொரு தெய்வத்தை காட்டியது

படைத்தல், காத்தல், அழித்த, வீரம், காதல், இரக்கம், கொடை, கோபம், கனிவு, பரிவு , தத்துவம் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தெய்வத்தை காட்டியது

தத்துவாளனாக கண்ணனை காட்டியது, வீரனாக ராமனை காட்டியது, அது காதலுக்கு மன்மதனை காட்டியது, கல்விக்கு சரஸ்வதியினை, செல்வதுக்கு லட்சுமியினை காட்டியது

கடவுளுக்கு ஒரே கடமையும் ஒரே முகமும் அல்ல அவருக்கு முப்பது முக்கோடிக்கும் மேலான பண்புகள் உண்டு என்பதற்காக கோடிகணக்கான தேவர்கள் என சொன்னாலும் அது மகா முக்கிய பண்புகளை சொல்ல சில தெய்வங்களை காட்டியது

நீங்கள் ராமனோ கண்ணனோ அல்ல காணும் ஒவ்வொரு தெய்வத்தையும் உற்றுபார்த்தால் கடவுளின் ஒரு குணத்தை அறியலாம், அதன் மூலம் அந்த மாபெரும் கடவுளின் ஒரு பக்கம் புரியும்

இப்படி ஒவ்வொரு தெய்வமாக பார்க்க பார்க்க அந்த கடவுளின் ஒவ்வொரு தத்துவமும் புரியும்

உதாரணம் ராமனை பாருங்கள் வீரமும் நீதியும் தெரியும், கண்ணனை பாருங்கள் நம்பியவரை காப்பான் என்பது தெரியும், இந்திரனை பாருங்கள் தவறே செய்தாலும் தப்பமுடியாது எனும் தத்துவம் புரியும்

அனுமானிடம் நன்றி தெரியும், திருப்பதி சாமியினை கண்டால் அட நமக்கு பொருள் கொடுக்க தெய்வமுண்டு என்பதும் புரியும், திருகாளகத்தியினை கண்டால் அருள் வழங்க காத்திருப்பதும் புரியும்

முருகனை கண்டால் எந்த ஆபத்திலும் காக்க வருவது தெரியும். பிள்ளையாரை கண்டால் கடவுள் பெரும் பலம் கொண்டவர் என்பது தெரியும்

சுடலையும் அய்யனாரும் கண்டால் கடவுளின் கோபம் புரியும், அதுவே அம்மனை கண்டால் சாந்தம் தெரியும்

சாதாரண மனிதனுக்கு கடவுளை ஒவ்வொரு பக்கமாக சொல்ல ஒவ்வொரு தெய்வத்தை சொன்னார்கள்

அறிவியலையும் வானிலையினையும் வாழ்வியாலியும் சொல்ல தெய்வங்களை சொன்னார்கள், சித்தர்களும் ஞானிகளும் யோகிகளுமாக வந்து எவ்வளவோ காரியங்களை விளக்கி சொன்னார்கள்

இதுவே ஒரே தெய்வம் என வணங்க சொன்னால் பாமர மனிதனுக்கு என்ன தெரியும்? அவன் குழம்பிவிட மாட்டானா? சரியாக புரிந்துகொள்ளமுடியாமல் திகைத்துவிட மாட்டானா?

இன்னும் உங்களுக்கு புரியாவிட்டால் இப்படி சொல்லலாம்

அறிவியல் உலகம் என சொல்லிவிடுகின்றீர்கள், ஆனால் அறிவியலின் பிரிவு என்ன?

மருத்துவம், கட்டடம், வானியல், விமானம், வேதியியல், கணிதம், கப்பல், கரிமவியல், கணிப்பொறி , தாவரவியல் விலங்கியல் என எத்தனை நூறு அறிவியல் பிரிவு உண்டு

இதை மொத்டமாக கற்ற ஒரு அறிவியல்வாதி ,விஞ்ஞானி உண்டா? இந்த பகுத்தறிவாளன் எவனுக்காவது ஒரு அறிவியல் ஒழுங்காக தெரியுமா?

அட போன் எப்படி இயங்குகின்றது, கணிப்பொறியும் இணையமும் எப்படி இயங்குகின்றது என தெரியுமா?

இதை தெரிந்தவனுக்கு விமானவியல் தெரியுமா, இல்லை அணுதத்துவம் தெரியுமா?

ஆக மானிடன் வாழும் இந்த பூலோகத்திலே இவ்வளவு விஷயம் இருக்க, மாபெரும் சக்தியான கடவுளுக்கு எவ்வளவு தத்துவமும் மாபெரும் ஆற்றலும் இருக்கும்

அதை ஒரே கடவுள் என அறிவது சாத்தியமா?

ஒரே அறிவியல் என ஒரு மனிதன் படிப்பது சாத்தியமா? அது சாத்தியமானாலும் ஒரே கடவுள் என அவரை அறிவது சாத்தியமில்லை

அட கலைஞர் கருணாநிதியினையே எழுத்தாளரா? அரசியல்வாதியா? வசனகர்த்தாவா? கவிஞரா? பொய்யரா? சுயநலவாதியா? பெரியாரிஸ்டா, போலியிஸ்ட்டா என பட்டிமன்றம் வைத்துபார்க்கும் கட்சி திமுக‌

மைக்ராஸ்கோப்பில் பார்க்கும் அளவு வெறும் கல்லுக்கே அத்தனை முகம் என்றால், இமயமலை எப்படி இருக்க்கும்? கருணாநிதி கல் என்றால் கடவுள் இமயமலை

கடவுள் ஒருவரே அதில் யாருக்கும் சந்தேகமில்லை ஆனால் அறிந்து கொள்வது எப்படி என்பதுதான் விஷயம்

இந்துமதம் அவரின் எல்லா பக்கமும் அறிய ஒவ்வொரு கடவுளை உருவாக்கி மனிதன் கடவுளின் முழு தன்மையும் அறிய வழிகோலியது, அந்த பெருமை இந்துமதம் தவிர வேறு எங்கும் இல்லை

இது அறியாமல் இந்துமத்தை பழிப்பது சூரியனுக்கு ஏன் எல்லா பக்கமும் ஒளி ஒரு பக்கம் இருந்தால் என்ன என கேட்பது போலாகும்

ராசா இந்துக்களுக்கு ஏக சிக்கல் இருப்பதால் வாழ்த்து சொல்ல முடியாது என்கின்றார்

இஸ்லாமியருக்கு ரம்ஜானுக்கும் மிலாதுநபிக்கும் வாழ்த்து சொல்ல முடிகின்றது

கிறிஸ்தவருக்கு ஈஸ்டருக்கும் கிறிஸ்துமஸ்க்கும் புத்தாண்டுக்கும் வாழ்த்து சொல்லமுடிகின்றது

இந்துக்களுக்கு குறைந்தபட்சம் ராம நவமிக்கும், கோகுலாஷ்டமிக்கும், தீபாவளிக்கும் வாழ்த்து சொல்லமுடியாதா?

ராசாவினை அவரின் குலதெய்வம் பார்த்துகொண்டிருக்கின்றது, அவர் பேசும் பேச்சை எல்லாம் கேட்டுகொண்டிருக்கின்றது, அது மனசாட்சியாய் அவரிடம் கேள்வியும் கேட்கின்றது

ஆனால் மனசாட்சியினை கொன்றுவிட்டு பேசுகின்றார் ராசா, இதில் ஆச்சரியம் ஏதுமில்லை மனசாட்சியினை கொன்றவனே திமுககாரனாக இருக்கமுடியும்.