தேசபற்று என்பது இங்கு கொஞ்சமும் இல்லை..

வட இந்தியாவில் ஒருவனோ இல்லை ஒரு கோஷ்டியோ தாங்கள் பாகிஸ்தானுக்கு சென்று தாவுத் இப்ராஹிமை பார்த்து விருந்து உண்டதாக பேசினாலோ எழுதினாலோ உயிரோடே இருக்க முடியாது

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பின்லேடனை பார்த்தோம், அவர் காஷ்மீரிகள் சிக்கல் பற்றி படம் எடுக்க சொன்னார் என மும்பை இயக்குநர்கள் சொன்னால் கொளுத்தியே விடுவார்கள்

வங்க தேசத்தில் ஜமா இஸ்லாமியா அமைப்பின் தலைவனை சந்தித்தோம் பர்மாவில் ஐ.எஸ் இயக்கத்த பிரதிநிதியோடு ஆமை கறி உண்டோம் என்றால் கல்கத்தா பொசுக்கிவிடும்

மசூத் அசாரோடு விருந்து உண்டேன் என சண்டிகரில் ஒருவன் சொன்னால் புதைத்தே விடுவார்கள்

இங்கு இந்திய ராணுவத்தார் 1500 பேரை கொன்றவனை ஆளாளுக்கு பார்த்து வந்தோம் என சொல்லிகொண்டிருக்கின்றார்கள், பெரும் தலைவனை கொன்றவனை நான் சந்தித்தேன் நீ சந்தித்தாய் என ஆளாளுக்கு போட்டி வேறு

இதெல்லாம் தமிழகத்தின் மாபெரும் அவமானம், தேசபற்று என்பது இங்கு கொஞ்சமும் இல்லை., அவ்விஷயத்தில் வட இந்தியர் தமிழரை விட பன்மடங்கு மேலானவர்கள்