இந்தியா மட்டும் அமைதியாய் இயங்குவது எப்படி?

ஈரான், ஈராக், சிரியா, லிபியா, சிலி, ஹாங்காங், பாகிஸ்தான் என ஏராளமான நாடுகளில் பகிரங்கமாக நடக்கின்றது போராட்டங்கள்

ஜெர்மன், பிரான்ஸ், இன்னும் பல தேசங்களில் வெடிக்க காத்திருக்கின்றது சிக்கல். ஜப்பானும் தென்கொரியாவும் கத்த ஆரம்பித்தாயிற்று

பிரிட்டன் சகதியில் சிக்கிய யானையாக தடுமாறுகின்றது..

உலக நிலவரத்தில் எல்லா நாடும் தடுமாறுகின்றது, அமெரிக்கா ஐ.நாவுக்கான நிதி வரை வெட்டி விட்டது, அவர்களின் செல்லபிள்ளைக்கே வீசியெறிய பணமில்லை

பொருளாதார முடக்கமும் மக்கள் போராட்டமும் எல்லா நாடுகளிலும் நடந்துகொண்டிருக்கின்றன, அந்த முடக்கத்துக்கு இந்தியாவும் தப்பமுடியாது

இந்தியாவினை மோடி கெடுத்தார் எனும் கோஷ்டி உலகத்தின் இத்தனை நாடுகளை கெடுத்தது யார் என கேட்டால் பதில் சொல்ல தெரியாமல் ஓடிவிடும்

சரி, மற்ற நாடுகளில் இவ்வளவு பெரும் போராட்டம் வெடிக்கும் பொழுது இந்தியா மட்டும் அமைதியாய் இயங்குவது எப்படி?

இங்கு நிலமை அவ்வளவு மோசமில்லை, அவனவன் வேலையினை அவனவன் பார்ப்பதால் வேலை இருப்பதால் வருமானம் வருவதால் சத்தமில்லை

சத்தமிடுவதெல்லாம் எதிர்கட்சியும் அவர்கள் மீடியாவும் அவர்களுக்கு படியளந்து சம்பாதித்த தொழிலதிபர் கூட்டமும்