ஸ்வீடன் கம்பெனியின் விமானங்கள் தரமானவை அல்ல
ஸ்வீடனின் இந்தியாவுக்கான தூதர் தன் நாட்டு கம்பெனியான சாப் தயாரிப்பான கிரிப்பன் விமானங்களை வாங்கலாம் என்கின்றார்
அதாவது இந்தியா 114 விமானங்களை வாங்கும் திட்டத்தில் இருக்கின்றது, 36 விமானங்களை ரபேலை கொண்டு நிரப்பியாயிற்று மீதமிருக்கும் விமானங்களை வாங்க இந்தியா முயற்சிக்கின்றது
இதில் அமெரிக்க எப் 21 ரஷ்யாவின் சூ 57 போன்றவை பரிசீலனையில் உள்ளன
இதில்தான் இந்த ஸ்விடன் தூதர் களத்துக்கு வருகின்றார், இது ஆச்சரியமானது
பொதுவாக ஆயுத தயாரிப்பு கம்பெனிகளே இதுபற்றி பேசும் அரசுகள் பேசாது , அரசு அனுமதி கொடுக்கலாமா இல்லையா என்பது பற்றித்தான் பேசும்
ஆனால் ஸ்வீடன் தூதரே தங்கள் நாட்டு கம்பெனி விமானத்தை வாங்க சொல்வது அதிர்வுகளை கொடுக்கின்றது
ஸ்வீடன் கம்பெனியின் விமானங்கள் தரமானவை அல்ல, சோப்பு டப்பா ரகம் . ரபேலின் தரத்துக்கு அருகே கூட அவை வரமுடியாது
எமக்கென்னமோ ரபேல் விவகாரத்தை கிளறிய கோஷ்டிகளை தூக்கி போட்டு மிதித்தால் இந்த தூதர் சிக்குவார் போலிருக்கின்றது
காரணம் ரபேல் விவகாரம் பற்றி எரியும் பொழுதே கிர்பன் விமானத்தை வாங்குங்கள் என சொன்னவர் இவர், கிர்பன் விமானத்தை இந்திய விமானபடை நிராகரித்தது
ஆம், முன்பு போபர்ஸ் பீரங்கி ஸ்வீடனில் இருந்து வாங்கபட்டு அதில்தான் ராஜிவும் சிக்கினார், இப்பொழுது ரபேல் வேண்டாம் என்றவர் ராகுல்
ஆக கூட்டி கழித்து பாருங்கள் உங்களுக்கே சில விஷயம் புரியும், இங்கு நடக்கும் பல ஒப்பாரிகளின் விவகாரம் இப்படித்தான்
