இலங்கை தமிழரில் ஒரு கோஷ்டி இருக்கின்றது

இலங்கை தமிழரில் ஒரு கோஷ்டி இருக்கின்றது, அது புலிகளை பிடிக்காதது அதே நேரம் இந்தியாவும் அவர்களுக்கு பிடிக்காது

அவர்கள் அன்னாளைய யாழ்பாண மேலாதிக்க கோஷ்டியின் வாரிசுகள், இந்த யாழ்பாண கோஷ்டிகள் தமிழ் தமிழ்கலாச்சாரம் என்பார்கள் தமிழில்தான் பேசுவார்கள் ஆனால் மேற்குலகத்துக்கு அடிபணிந்து கிடப்பார்கள்

அவர்கள் வெல்பவர் பக்கம் சேர்ந்து கொள்வார்கள், பிரபாகரன் ஆண்டால் அவனுக்கு சல்யூட் சிங்களன் ஆண்டால் அவனுக்கும் சல்யூட்

கார்த்திகை 26 என கிளம்புவார்கள், அடேய் ஒன்று கார்த்திகை 12 என சொல்லுங்கள் அல்லது நவம்பர் 26 என சொல்லுங்கள்

மாறாக நவம்பரும் கார்த்திகையும் கலந்து கார்த்திகை 26 என்றால் எப்படி என்றால் பதில்வராது

இக்கோஷ்டியில் சில நம்பக்கம் வந்திருக்கின்றன, ஹம்பாந்தோட்டையில் இருந்து சீனா வெளியேறுகின்றது என்றால் அடேய் பொய்யனே அது பரீசிலனை மட்டுமே என அலறி அடித்து வருகின்றார்கள்

ஆம் சீனா இலங்கையில் இருந்து வெளியேறகூடாது என்பதும் அது இந்தியாவினை நாசமாக்க வேண்டும் என்பது அவர்களின் கேடுகெட்ட எண்ணம்

ஒரு அரசு மறுபரீசிலனை என சொன்னாலே ராஜதந்திர மொழியில் ரத்து என பொருள், ஆனால் இவர்கள் அலறுகின்றார்கள் அயோக்கியர்கள்

அவர்கள் இலங்கை குடிமக்களாக இருப்பது நல்லது, ஆனால் இந்தியாவில் இருக்கும் அகதிகள் பல்லாயிரம் பேரை திரும்ப பெறட்டும், பிரபாகரனை வைத்து வயிறு வளர்க்கும் தமிழக அழிச்சாட்டிய கும்பலையும் அங்கு அழைத்து செல்லட்டும்

எம் நாட்டையும் நாட்டு நலத்தையும் நாம் நேசிப்பது போல அவர்கள் நாட்டை அவர்கள் நேசிக்கலாம், ஆனால் எம் நாட்டை எதிர்க்கும் எவனுக்கும் இங்கு இடமில்லை

இலங்கை அதிபரே இந்தியாவிடம் சரணடையும் பொழுது இந்த இந்திய எதிரிகளின் மனம் எவ்வளவு கொதிக்கின்றது என்றால் அவர்களின் இந்திய வெறுப்பை அறிய முடிகின்றது

இவர்களால் இலங்கை தமிழருக்கும் நன்மை இல்லை, இலங்கைக்கும் நன்மை இல்லை யாருக்குமே நன்மை இல்லை