முதலைகள் அலற தொடங்கி இருப்பது குளம் சுத்தமாகின்றது என்பதற்கு சாட்சி
சுதந்திரம் வாங்கியவுடன் புதிய இந்தியாவினை கட்டி எழுப்ப தயாரானது இந்தியா, ஆனால் கஜானா காலி.
இந்நாட்டை விவசாய அடிப்படை நாடாகவும், தொழிலதிபர்களை கட்டுபடுத்தும் சோஷலிச நாடாகவும் அமைக்க பட்டேல் போன்றவர்களுக்கு ஆசை இருந்தது
ஆனால் நேரு போன்றோர் விவசாயம் போன்ற உற்பத்திகளை விட தொழில்துறை மகா அவசியம் என்றார், அதில் தவறேதுமில்லை. தேர்தல் உட்பட பல விஷங்களுக்கு நிதி தேவையாய் இருந்தது
அன்றைய டாட்டா போன்றோர் அள்ளி கொடுத்துவிட்டு இந்நாட்டின் சட்டம் தொழிலதிபர்களுக்கு சாதகமாய் இருக்குமாறு பார்த்து கொண்டனர்
இது போதாமல் வெள்ளையன் சுதந்திரம் கொடுத்தாலும் பல தொழில்கள் அவன் கட்டுப்பாட்டில் இருக்குமாறு பார்த்து கொண்டான் உதாரணம் ஹிந்துஸ்தான் லீவர் போன்றவை
ஆம், இந்நாட்டு சட்டங்கள் எக்காலமும் தொழிலதிபர்களுக்கு ஆதரவானவை அதை காங்கிரசும் அதில் புகுந்த அந்நிய நாட்டு கைகூலிகளும் தீவிரமாக்கினர்
மன்மோகன்சிங் அதை உச்சத்துக்கு கொண்டு சென்றார்
பாஜக அரசு இப்பொழுது தலைகீழ் திருப்பம் கொடுக்கின்றது, இந்தியாவுக்கு இது புதிது என்பதால் தொழிலதிபர்கள் அலறுகின்றனர்
இத்தேசத்தின் அனுதினமும் கதறி கதறி சாகின்றான் விவசாயி, அவன் குரலை கேட்பார் இல்லை. அனால் தொழிலதிபர் அழுதான் என்றால் ஏதோ நாடே நாசகதி போல அலறுகின்றார்கள் அல்லவா?
இதுதான் அரசியல், டாட்டா தொடங்கி வைத்த பணக்கார அரசியல்
பணக்கார தொழிலதிபர் அலறுகின்றான் என்றால் இந்த ஆட்சி நல்லாட்சி என்றே பொருள், 1950களில் இருந்து இந்நாடு பணக்கார தொழிலதிபர்களுக்கு காட்டிய சலுகையில் இந்த அரசு கைவைக்கின்றது என்பதுதான் விஷயம்
ஆக தேசம் மிக சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது, கத்துபவன் கத்தத்தான் செய்வான் காரணம் தொழிலதிபர்களுக்கு மீடியாக்களையும் அல்லக்கைகளையும் தூண்டிவிடுதல் எளிது
உண்மையில் தேசம் மிக சரியான பாதையில் செல்கின்றது,இதன் பலன்கள் பின்னொரு நாளில் தெரியும்
முதலைகள் அலற தொடங்கி இருப்பது குளம் சுத்தமாகின்றது என்பதற்கு சாட்சி
