தும்பிகளின் மிரட்டலால் நிறுத்தபட்டது என்கின்றார்கள்

அங்கிள் சைமனை கலாய்த்து நியூஸ் 7 தொலைகாட்சி ஏற்பாடு செய்த ஒளிபரப்பு நிகழ்ச்சி தும்பிகளின் மிரட்டலால் நிறுத்தபட்டது என்கின்றார்கள்

இதில் தும்பிகள் மிரட்டி நிகழ்ச்சி நிறுத்தபட வாய்ப்பில்லை , தும்பிகளை அரையறிவு ஜீவன்களாக கூட யாரும் கருதவில்லை, விஷயம் வேறுமாதிரியானது

அதாவது அங்கிள் சைமன் ஒரு கூலிகுரலாளி, யாரும் காசு கொடுத்தால் அவர்களுக்கு அந்த காசுக்கு ஏற்ப கடுமையாக கத்துவார், அவரின் தொழில் அது

அவரை முதலில் நியூஸ்7 தொலைகாட்சிதான் வளர்த்தது, அதுவும் கருணாநிதிக்கு எதிராக அவரை கொம்பு சீவும் அவசியம் அந்நாளைய ஜெயலலிதா அடிமையான வைகுண்டராஜனுக்கு நிர்பந்தமாயிருந்தது

தந்தி டிவியும் , நியூஸ்7 தொலைகாட்சியும் சீமானை போட்டி போட்டு கொம்பு சீவின, ஒரே ஒரு கேள்வியில் அங்கிள் சைமனின் டவுசரை கிழித்து ஓட அடிக்கும் வாய்பிருந்தும் அதை தவிர்த்து அவரை வளர்த்தன.

இது விஜயகாந்தின் எம்.எல்.ஏவாக அன்று இருந்த மைக்கேல் ராயப்பனை வைகுண்டராஜன் அதிமுகவுக்கு மீன்பாடி வண்டியில் தூக்கி சென்றபின் வேறுவடிவுக்கு சென்றது

ஆம் , அந்த மைக்கேல் ராயப்பன் விஜயகாந்தால் எம்.எல்.ஏ ஆனவர். அந்த ராதாபுரம் தொகுதி தாதுமணலின் சுரங்கமான கடற்கரையினை கொண்டிருந்தது, தாதுமணல் என்றால் யார் இருப்பார்? அண்ணாச்சி வைகுண்டராஜன்

அவரை மீறி ஒரு துரும்பும் செய்யமுடியா நிலையில் மைக்கேல் ராயப்பனை சாக்கில் கட்டி தூக்கி சென்று ஜெயாவின் காலடியில் போட்டார் அண்ணாச்சி, அவரின் தொழிலுக்கு ராதாபுரம் எம்.எல்.ஏ தன் வீட்டு வாசலில் தலைகீழாய் தொங்கவிடுவது அவசியமாயிருந்தது

இதில் கொதித்தெழுந்த விஜயகாந்த் தூத்துகுடியில் வைகுண்டராஜனை கடுமையாக விமர்சித்தார் அண்ணாச்சி கண்ணை காட்ட களத்துக்கு வந்தார் சைமன்

அப்பொழுது அங்கிளார் கத்திய வாதம்தான் “வடுக வந்தேறி விஜயகாந்த்”

இப்படியாக அங்கிள் சைமனுக்கும் வைகுண்ட ராஜனுக்குமான இடியாப்ப பிணைவு உறவுகள் அதிகம்

இப்பொழுது விஜயகாந்த் களத்தில் இல்லை, வடுக வந்தேறி கோஷமில்லை, தாதுமணல் தொழில் இல்லை, அண்ணாச்சி வைகுண்டராஜன் இருக்கும் இடம் தெரியவில்லை, எங்கோ குகைக்குள் கிடப்பது போல் மறைந்துவிட்டார்

இந்நிலையில் நியூஸ்7 அங்கிள் சைமனை கலாய்க்க பார்த்திருக்கின்றது, அங்கிள் விடுவாரா? அவர் பிரபாகரனிடம் உண்டு பொட்டு அம்மான் மடியில் உறங்கியவர் அல்லவா?

அவர் தன் புறா ஒன்றின் மூலம் வைகுண்டராஜனுக்கு தூத்து அனுப்பியிருக்கலாம், “உங்கள் டிவி என்னை கலாய்த்தால் உங்களுக்கும் எனக்கும் உள்ள உறவையும்,எனக்கு நீர் பணம் கொடுத்த கதையும் இன்னும் பல ரகசியங்களையும் வெளியிடுவேன்

சாம்பிளுக்கு வைகுண்டராஜன் திசையன்விளையில் குதிப்பு மீன் குழம்பும், மாசி கருவாடும் எனக்கு ஊட்டினார் என தொடங்கட்டுமா..?”

இப்படி கேட்டால் அண்ணாச்சி சும்மாவா இருப்பார்? அந்த Nelson Xavierக்கு போனை போட்டு “அய்யா அங்க என்னல செய்றிய? திங்கிற சோத்துல மண் அள்ளி போட கிளம்பிட்டியளால‌? சீமானை ஏன் இழுக்குறீங்கல? அவன் வாயதிறந்தா நாம எல்லாரும் இருக்கமுடியுமால‌..

சும்மாவே நேரம் சரியில்லல, நானே எங்கே இருக்கேன்னு தெரியாலல…

அப்படி நம்ம டீவியையும் ஆக்கிபுடாதுங்கல, உங்களுக்கெல்லாம் சோறு வேணுமா வேண்டாமால சவத்து மூதியளா..”

இதன் பின் நிகழ்ச்சி வரும்..

(வைகுண்ட ராஜனின் மகன் திருமணத்தில் அங்கிளார் கலந்து கொண்ட காட்சி இது, இப்படி மிக நெருக்கமான உறவுகள் இருவருக்கும் உண்டு

அண்ணாச்சி மகன் திருமணத்துக்கு கடா விருந்து போட்டாரு பாரு, பக்கத்துல ஒருத்தன் குறிச்சுட்டே இருந்தான், ஒருத்தன் ஆர்டர் பண்ணிட்டே இருந்தான் எனும் கதை அங்கிளின் கைவசம் எப்பொழுதும் உண்டு..)