இந்தியாவிற்கு கிறிஸ்துவினை சொல்லவந்த முதல் துறவி அந்த பிரான்சிஸ் சவேரியாரே
“மச்சம் பிடிப்பவர் வாழ்வில் மிச்சம் இல்லை” என்பதும் “உழுதவன் கணக்கு பார்த்தால் உளக்கும் மிஞ்சாது” என்பதும் பழமொழி
கடல் தொழில் ஒரு தனி உலகம், அவசரத்திற்கு படகில் இருந்து இளைப்பாற இறங்ககூட முடியாத தொழில் அது, மகா விழிப்பு, உழைப்பு, நொடிப்பொழுதும் அயராத எச்சரிக்கை, உயிரை பணயம் வைக்கும் சவால் இவை எல்லாம் இல்லாமல் மீணவதொழில் இல்லை.
அக்காலத்தில் இன்று உள்ளதுபோல போக்குவரத்து இல்லை, பிடிக்கும் மீன்களை விற்பனை செய்ய அவர்களின் சவால் மிக பெரிது. அதனால் முத்துகுளித்தல், கடல்பொருள் சேகரித்தல் என கடல்சார் தொழில் செய்துவந்தனர்.
இடி,மழை,புயல்,கடல் சீற்றம் என இயற்கை எதிர்ப்புகளை தாங்கினர், ஆற்றுப்ப்பாசன பகுதியில் மட்டும் கவனம் செலுத்திம் வரி விதித்து, இன்றைய அரசினை போலவே அன்றும் புறந்தள்ளிய அரசுகளையும் மீறி வாழ்ந்தனர், 15ம் நூற்றாண்டில் இன்னொரு பெரும் சவால் அவர்களுக்கு வந்தது.
அது கடற்கொள்ளை, இன்றைய ஏடன் வளைகுடா கொள்ளையர்களை போல அவர்களின் அட்டகாசம் சொல்லி மாளாது, சமயங்களில் ஊருக்குள் புகுந்து கொள்ளை அடிப்பது வரை நீண்டது.
தமிழக நாயக்க அரசுக்கு தரையுத்தம் தெரியும், கடற்கரைக்கு சென்றால் ஏதோ மீன் சுட்டு சாப்பிட தெரியும் கடல்யுத்தம் அறவே தெரியாது.
இந்த காலகட்டத்தில்தான் ஒரு கிறிஸ்தவ துறவி இந்தியா வருகிறார். கோவாவில் வந்து இறங்குகிறார். அது போர்த்துகீசிய கட்டுப்பாடு பகுதி, அவர்களின் தலமை அலுவலகம். அங்கிருந்து தென் தமிழ்நாட்டிற்கு வருகிறார். அங்கிருந்து கடல்பகுதிகளை சுற்றி பார்க்கிறார்.
சென்னை சாந்தோம் அப்பொழுது போர்த்துகீசிய கட்டுபாட்டு பகுதியாய் இருந்தது
இதெல்லாம் 15ம் நூற்றாண்டு காலம், அப்பொழுது பிரிட்டிசார் வரவில்லை, சென்னை கோட்டை இல்லை மாறாக சாந்தோம் பகுதியில் போர்த்துகீசியர் செட்டில்மென்ட் இருந்தது
அவர்களில் ஒரு கமாண்டர் மெட்ருஸ் என்றொருவன் இறந்தான், அவனை புதைத்த இடமே மெட்ராஸ் ஆயிற்று
இக்காலத்தில்தான் பரங்கிமலை சர்ச், சாந்தோம் ஆலயம் கட்டபட்டன. சாந்தோம் தோமையாரின் ஆலயம் அல்ல, மாறாக போர்த்துகீசியர் கட்டிய தோமையார் வழி கிறிஸ்தவ சீடன் ஒருவன் ஆலயம்
ஆம் தோமாவழி கிறிஸ்தவ சபை ஒன்று உண்டு, அவர்களில் ஒருவனுக்கான கல்லறை அவை, மற்றபடி தோமா இங்கு வரவில்லை பரங்கிமலையில் கொல்லபடவுமில்லை, சாந்தோமில் புதைக்கபடவுமில்லை
மங்களூர் பக்கம் பெரும் போர் நடத்தி , கோவாவில் பெரும் ரத்த வெள்ளத்தை ஏற்படுத்திய போர்த்துகீசியர் அன்றைய மெட்ராஸை தங்கள் கிறிஸ்தவ பாரம்பரிய இடமாக சொல்ல சில தந்திரங்களை செய்தனர்
அதில் ஒன்றுதான் பரங்கிமலை கதையும் சாந்தோம் கதையும், விஷயம் வேறொன்றுமில்லை
தோமா இந்தியா வந்தார் என்பதெல்லாம் கட்டுகதை சென்னை கிறிஸ்தவ செய்தி எல்லாம் போர்த்துகீசியரின் கட்டுகதை
ஆனால் மிக ஆதாரபூர்வமாக சொல்லமுடியுமென்றால் இந்தியாவிற்கு கிறிஸ்துவினை சொல்லவந்த முதல் துறவி அந்த பிரான்சிஸ் சவேரியாரே.
அவர் பெயர் பிரான்ஸிஸ், அவர் பிறந்த கோட்டை சேவியர் கோட்டை, சேவியர் கோட்டையின் பிரான்ஸிஸ் என்பவர் இங்கு சேவியராக சவேரியாக அறியபட்டு , யார் எனும் விகுதி சேர்த்து சவேரியார் ஆனார்
மிளகும்,சந்தணமும்,அரிசியும் ஓடும் என்ற நினைப்பில் வந்தவருக்கு மகா அதிர்ச்சி காத்திருந்தது.
தென் தமிழக கடலோர நிலை கடற்கொள்ளையரால் மிகவும் பாதிப்புள்ளாகியிருந்தது
கொழும்பு மலாக்கா உட்பட பல இடங்களுக்கு செல்லும் கப்பல்களை தாக்குவதும் தென் தமிழக மீணவ கிராமங்களை சூரையாடுவதும் இந்த ஆயிரத்தில் ஒருவன் நம்பியார் கோஷ்டி போல் அவை அட்டகாசம் செய்துகொண்டிருந்தன
தென் தமிழக மீணவர் நிலையும், அவர்கள் சந்திக்கும் சிக்கலும், உயிர்வாழ தினம் நடத்தும் போராட்டமும் அவரை கலங்க செய்கிறது. மதுரையோ திருவிதாங்கூரோ யாருக்கும் கடல்சண்டை பழக்கமில்லை.
அம்மன்னர்களின் அனுமதியோடு போர்த்துகீசிய உதவி பெற்று, கடல்கொள்ளையர்களை விரட்ட வைக்கின்றார்.
சென்னை சாந்தோமில் இருந்து வந்த போர்த்துகீசிய படைகள் அந்த கடற்கொள்ளையரை அடக்கின
அன்றிலிருந்து தென்னக கடற்கரை மக்களின் பிரதான தெய்வநிலைக்கு அவர் உயர்த்தபட்டார்,
தென் தமிழகத்தில் தெற்கு கடற்கரையோரம் முழுக்க அதாவது வேம்பார் தொடங்கி கேரளா வரையான கடற்கரையோரம் முழுக்க கிறிஸ்தவர்களாக மாற இவர்தான் காரணம்
தமிழகத்தில் அவரின் பணி அதோடு நிற்கவில்லை, தென்னக மக்களின் துயரம் தீர்க்க கல்வியே மாபெரும் ஆயுதம் என்பது அவரின் கொள்கை. தனது சபைக்கு அவர் எழுதிய கடிதங்களில் எல்லாம் தென்னக மக்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என எழுதுகிறார், அதன்படியே தமிழகத்தில் பல புகழ்மிக்க கல்வி நிலையங்கள் அவர் சார்ந்த சபையால் நடத்தபடுகின்றது.
அவர் பாரிசீல் பேராசிரியராய் இருந்தார் என்பதால் கல்வி மூலம் இங்கு மதம் மாற்றலாம் என்பது அவரின் கொள்கையாய் இருந்தது
தமிழக மீணவர்களின் உண்மையான துயரை உணர்ந்துகொண்டவர் அவர், அதற்கான துயர்துடைப்பு முயற்சியில் ஈடுபட்டார், எங்கோ இருந்து வந்து தங்களுக்காக உழைத்த அவரை இன்றுவரை அச்சமூகம் நன்றியோடு நினைக்கின்றது.
ஒரு விஷயத்தை ஒப்புகொள்ள வேண்டும்
அது கல்பாக்கம், மெரீனா,ராமேஸ்வரம், மண்டபம், வேதாரண்யம்,இடிந்தகரை, கூடுதாழை, குளச்சல், என அந்த கடற்கரையில் மிக நிம்மதியாக சந்தோஷமாக கடல்தொழில் செய்யும் கிராமங்கள் உண்டா?
பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கும் மீணவ குடும்பம் உண்டா?
அல்லது அவர்களின் கோரிக்கைக்கோ அல்லது நியமான உணர்விற்கோ ஒரு ஆதராவது உண்டா? இடிந்தகரை அல்ல தினம் தினம் இடிந்துகொண்டிருக்கும் ராமேஸ்வர மீணவர்களுக்கு என்ன ஆறுதல் கிடைத்துவிட்டது?
காரணம் அவர்களின் துன்பத்தை, துயரத்தை ஒரு ஐரோப்பிய துறவி உணர்ந்த அளவிற்கு இன்னும் யாரும் உணரவில்லை.
மீணவ இனம் தனிமையிலே இருந்தது அவர்கள் துயர் அறிவார் யாருமில்லை, அதை மிக சரியாக பயன்படுத்தினார் சவேரியார்
அவரை போலவே தேனி,மதுரை,ராமநாதபுர விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்து கண்ணீர் விட்டவர் பெருமகன் பென்னிகுயிக். பிரிட்டிஷ அரசாங்கமே பின்வாங்கிய நிலையில், தனது சொத்துக்களை எல்லாம் விற்று இங்கு வந்து பெரியார் அணையை கட்டினார், ஏராளமான விவசாயிகளை வாழவைத்தார்.


இன்று விவசாயியும், மீணவனும் இந்திய அரசிற்கு மகிழ்ச்சியானவர் அல்ல, இரு இனமும் தனது சொந்த உழைப்பிற்கு விலைவைக்கமுடியாத பரிதாப ஜீவன்கள்,
யாரோ எங்கிருந்தோ வந்து விலை வைப்பார்கள். கட்டுபடுவதை தவிர இவர்கள் என்ன செய்ய முடியும்??
பல விவசாயிகளின் தற்கொலை அல்லது ராமேஸ்வர மீணவர்களின் துயரம், எங்கள் வாழ்விடத்தில் எங்களை அச்சமில்லாமல் வாழவிடுங்கள் என கைஎடுத்து கும்பிட்டு கதறும் இடிந்தகரை மக்கள். இவர்களை நினைக்கும் பொழுதெல்லாம் பென்னிகுயிக்கும் சவேரியாரும் கண்ணுக்குள் வந்து வந்து செல்கின்றார்கள்.
இன்னும் இவர்களை போன்ற பெரும் மனிதநேயமிக்க மனிததெய்வங்கள் பிறந்து வந்து காப்பாற்றும் வரை விவசாயி மற்றும் மீணவர்களின் துயரம் நீங்கபோவதே இல்லை.
ஐரோப்பிய பென்னிகுயிக் தனது சொந்த சொத்துக்களை விற்று தமிழக அணைகட்டியவர், ஆனால் அந்த சினிமா கதைக்கும் இங்கு சண்டை.
சவேரியாருக்கு இறுதிவரை இருந்த சொத்து 2 செட் ஆடையும் கையில் ஒரு சிலுவையும் மட்டுமே, அவரும் பேராசிரியர்தான், ஆனால் கடினபட்டு தமிழ்படித்து அரைகுறை தமிழில் பேசினார்.
ஆனால்இன்றுள்ள கிறிஸ்தவ போதகர்களின் உடை அலங்காரமும், உல்லாச வாழ்வும்,சொத்துமதிப்பும் விரைவில் பில்கேட்ஸ்கே சவால் விட கூடியவை.
சவேரியார் என்பவர் இங்கு மதம் பரப்ப வந்தவர் சந்தேகமில்லை, இந்தியா மட்டுமல்ல மலேசியா, தைவான், ஜப்பான் என எங்கெல்லாமோ சுற்றி மரித்திருகின்றார்
அவர் ஐரோப்பாவில் இருந்து மதம் மாற்றவே வந்தார் மாற்றினார், ஆனால் தென்னகத்தில் அவரின் முத்திரை பல உண்டு, தனிமனிதனாய் நிறைய செய்திருகின்றார்
இன்று சவேரியாரின் நினைவு நாள், தமிழக மீணவர்களுக்காக அவர் செய்த சேவையும்,உழைப்பும் பின்னர் அவர் மூலமாக வந்த கல்வி நிலையங்களும் அதன் சேவையும் மதம் கடந்து நிச்சயம் பாராட்டதக்கது, தென்னிந்திய வரலாற்றில் அவருக்கு தனி இடம் உண்டு,
அது அவரது உடலை போலவே அழியாதது, நாகர்கோவில் கோட்டார் முதல் மணப்பாடு என தமிழகத்தில் அவர் வாழ்ந்த இடங்களிலும் அவர் உடல் அழியாமல் இருக்கும் கோவாவிலும் சிறப்பு கொண்டாட்டம் நடைபெறும்
எம்மை பொறுத்தவரை உறுதியாய் சொல்லமுடியும், அவரின் எளிமையும் உறுதியும் மகா அசாத்தியமானது, இரு ஆடைகளும் ஒரு சிலுவையுமே அவரின் சொத்துக்களாயின
இன்றிருக்கும் தமிழ்நாட்டு கிறிஸ்தவதுறவிகள் அவருக்கு ஏதாவது செய்ய விரும்பினால் அவர் புகழை காக்க விரும்பினால் தங்கள் அங்கியினை கழற்றி வைத்துவிட்டு சபைகளை கலைத்துவிட்டு செல்லட்டும்
அதுதான் அவர்கள் அவருக்கு செய்யும் மகத்தான அஞ்சலி
சவேரியார் பென்னிகுயிக் என இருவரில் யார் உயர்ந்தவர் என்றால் பென்னிகுயிக்தான் உயர்ந்தவன்
ஆம் சவேரியார் மதத்தை பரப்பத்தான் வந்தார், செய்த உதவிகளுக்கு ஈடாக அம்மக்களை மதத்திற்கு திருப்பினார், அதில் சுயநலம் இருந்தது. கடவுளுக்காக செய்கின்றேன் என்றாலும் நீ கிறிஸ்துவத்துக்கு வா இந்த உதவியினை பெற்றுகொள் எனும் வியாபாரம் இருந்தது
ஆனால் பென்னிகுயிக் உண்மையான மானிட நேயனாய் இருந்தான், அவன் அந்த தேனி மதுரை ராமநாதபுர மக்களிடம் ஒரு வியாபாரமும் பேசவில்லை, இதை கொடுங்கள் இதை கட்டிதருகின்றேன் என சொல்லவில்லை
மாறாக தன் சொத்துக்களை எல்லாம் விற்று அணைகட்டி இனி நீங்கள் வாழுங்கள் என சொல்லி ஏழையாய் செத்தான்
அவனே மனிதன், அவன் செய்ததே சேவை, ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்கா உன்னத சேவை
சவேரியார் தென்னகத்துக்கு உதவினார் ஆனால் மதமாற்ற நோக்கமும் பிரதிபலன் பார்க்கும் சுயநலமும் இருந்தது
அவரை விட பல படி மேலே நிற்கின்றான் பென்னிகுயிக், ஆம் உண்மையான மானிட சேவை என்றால் அதுதான், ஒரு பிரதிபலனும் அவன் எதிர்பார்த்தானில்லை, மானிட தெய்வம் அவன்