நாம் 2012ம் ஆண்டே சொன்னோம்

நீங்களெல்லாம் அங்கிள் சைமனின் ஈழகாமெடியினை இப்பொழுது பார்க்கின்றீர்கள், நாம் 2012ம் ஆண்டே சொன்னோம்

இவரை ஏன் கூலிகுரல் என்கின்றோம் என்றால் இதனால்தான், அன்று ஜெயலலிதா முதல்வராக இருந்தார் இவர் கருணாநிதியினை திட்டிகொண்டிருந்தார்

அப்பொழுது ஒரு எம்ஜிஆர் விழா நடந்தது, இவரை கூலிக்கு பேச அழைத்தார்கள் அதுதான் இந்த வீடியோ

அதில் நீங்கள் 6ம் நிமிடத்தில் இருந்து பாருங்கள், அதே பன்றிவேட்டை காமெடி

அதாவது இவருக்கு ஆமைகறியினை பிரபாகரன் ஊட்டியபொழுது ராம்சந்திரன் எவ்வளவு நல்லவன் தெரியுமா என பிரபாகரன் இவரிடம் புகழ்ந்தாராம்,

அப்பொழுது சிங்களன் குண்டுவீச வந்து சூழ்ந்தானாம்

இவரும் பிரபாகரனும் தலைதெறிக்க காட்டுக்குள் ஓடினார்களாம் (பிரபாகரன் உடல் எடை ஓடும் அளவுக்கா இருந்தது?)

அப்பொழுது ஒரு மரத்துக்கு பின்னால் இருந்து கொண்டு “அய்யய்யோ ராமசந்திரன் செத்துட்டாரே..” என பிரபாகரன் இவரிடம் அழுதாராம்

அட ஒரு வாதத்துக்கு அப்படி சிங்களன் வந்தாலும் கூட பிரபாகரன் உத்தரவினை பிறப்பிப்பானா? இல்லை எம்ஜிஆர் வாழ்க என சொல்லி ஓடுவானா?

அவன் என்ன ஈழபோராளியா இல்லை அதிமுக வட்ட செயலாளரா?

ஆனால் அவன் எம்ஜிஆரை பற்றி முக்கால் மணிநேரம் அந்த யுத்த நிலையிலும் பேசியிருக்கின்றான் , என்ன கொடுமை இது.

ஆக சிங்களன் சுற்றி நின்று யுத்தம் நடந்தபொழுது இவருக்கு பிரபாகரன் ஆமை கறி கொடுத்திருக்கின்றான், பன்றிகறி தர ஆசைபட்டிருக்கின்றான் அது போக ராமசந்திரன் வாழ்க என உருகியிருக்கின்றான்

கொஞ்சமும் ஈழதமிழரின் நலன் பற்றியோ விடுதலை பற்றியோ அந்த சண்டாளனுக்கு கொஞ்சமும் நினைப்பே இல்லை

(1986ல் பிரபாகரனை வீட்டு காவலில் வைத்தார் ராம்சந்தர், அதன் பின் தப்பி சென்ற பிரபாகரன் தமிழகம் வரவே இல்லை ராம்சந்தர் மேல் அவனுக்கு கோபம் இருந்தது

ராஜிவ் அமைதிபடை அனுப்பிய பொழுது ராம்சந்திரன் தடுக்கவில்லை என்பது அவனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது

ஆனால் இந்த சைமன் என்ன பொய்யெல்லாம் சொல்கின்றார் பார்த்தீர்களா?..)