உடல்பேறு குறைந்தோர் என வரவேண்டிய வார்த்தை
உடல்பேறு குறைந்தோர் என வரவேண்டிய வார்த்தை தமிழ்நாட்டில் மாற்று திறனாளி ஆயிற்று, எந்த திறமைக்கு மாற்று என கேட்டால் பெயர் வைத்தவனுக்கே தெரியாது
பிறப்பினால் உடல்பேறு குறைவது கொடுமை, பிறப்பிலே இருந்து இருக்கும் அக்குறை பெரிதும் அவர்களுக்கு தெரியாது பழகியிருக்கும்
அதிலும் சாதித்தோர் ஏராளம் உண்டு, சுழற்பந்து வீச்சாளர் சந்திரசேகர் முதல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் வரை அப்படியே
ஒரு கண் இழந்தும் ஒரே ஒரு கண்ணால் சாதித்தவர் ஏராளம், தளபதி நெல்சன், மோசே தயான் முதல் நம்ம ஊர் கருணாநிதிவரை அந்த வகை
கடவுள் அருளால் நன்றாக பிறக்கும் மானிடரை உடல்பேறு குறைந்தவராக்கும் கொடுமை இவ்வுலகில் உண்டு, எக்காலமும் உண்டு
எமக்கு தெரிந்து உலகிலே அதிக உடல்பேறு குறைந்தோரை உருவாக்கியது யாரென்றால் அங்கிள் சைமனின் அண்ணன் பிரபாகரன்
ஈழத்தில் செத்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள், ஆனால் இவனால் உடல்பேறு குறைந்தோர் ஆக்கபட்டவர்கள் ஏராளம், அவை எல்லாம் கண்ணீர் சிந்தவைக்கும் கொடூரங்கள்
தமிழரின் உரிமை மீட்க போகின்றேன் என கிளம்பி அவர்களின் உயிரையும் அது முடியா பட்சத்தில் அவர்களின் கை கால்களையாவது பறித்து போட்டதன் பெயர்தான் ஈழபோராட்டம்,
அதை செய்தவன் பிரபாகரன்