அவர் வாழ்வினை படமாக்குகின்றேன் என வருகின்றானா?

ஜெயலலிதா இறந்து இரு வருடமாகின்றது, அதற்குள் அவர் கதையினை படமாகவும் வெப் சீரியலாகவும் ஆளாளுக்கு எடுத்துகொண்டிருக்கின்றார்கள், மூன்றுக்கும் மேற்பட்ட படங்கள் வரலாம் போலிருக்கின்றது

அதாவது ஜெயாவின் கதைக்கு அவ்வளவு வரவேற்பு இருக்கும் என நம்புகின்றார்கள்

கருணாநிதி என்றொருவரும் இருந்தார், கடைசிவரை சினிமாவினை பிரியாமலும் இருந்தார். சினிமாகாரர்களுக்கு அவர் செய்த சலுகை ஏராளம்

எவனாவது ஒரு பயல் அவர் வாழ்வினை படமாக்குகின்றேன் என வருகின்றானா?

அட அவர் குடும்ப நிறுவணங்கள் எவ்வளவோ படம் எடுக்கின்றன அவர் கதையினை பேரன்களாவது படமாக்க நினைகின்றார்களா?

அவர் கதையினை படமாக்கினால் சல்லி பைசா வசூலாகாது என தெரிந்திருக்கும் போல