இனிதான் இருக்கின்றது விஷயம்

தூத்துகுடி மாவட்டம் குலசேகர பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கபடும் என மத்திய அரசு சொல்லிவிட்டது, இது நல்ல அறிவிப்பு என்றாலும் இனிதான் இருக்கின்றது விஷயம்

இந்த திட்டம் வெறும் 1 ஏக்கர் நிலத்தில் அமையபோவதில்லை மாறாக 2400 ஏக்கர் நிலம் வேண்டும் , இவ்வளவு பெரும் அரசு நிலம் அப்பக்கம் கிடையாது, நிச்சயம் தனியார் நிலத்தில் கை வைக்க வேண்டும்

விடுவார்களா கோஷ்டிகள்? எம்.பி வேறு அக்கா கனிமொழி

வாழ்வாதாரம் கெடுகின்றது, மக்களின் வயிற்றில் அடித்துவிட்டு ராக்கெட் தேவையா? நிலத்தை பிடுங்கும் காவிகள், அமித்ஷா அராஜகம் என கிளம்புவார்கள்

உண்மையில் குலசேகரபட்டினம் ஏவுதளம் அமைக்க மிக அருமையான இடம், அதிலிருந்து தொட்டுவிடும் தூரத்தில் இந்துமாக்கடல் வருவதால் மிக மிக அருமையான தேர்வு

இந்த கனவும் விண்வெளிதுறைக்கு 1970களிலே இருந்தது, ஆனால் காலம் கனியவில்லை

இப்பொழுது மகேந்திரகிரி ராக்கெட் எரிபொருள் நிலையத்தில் இருந்து அருகாமையில் இருப்பதாலும் இன்னும் பல காரணங்களாலும் குலசேகரபட்டினம் நோக்கி வருகின்றார்கள், பழனிச்சாமி அரசு இருக்கும் பொழுதே காரியத்தை முடித்துவிட மத்திய அரசு திட்டமிடுகின்றது

2400 ஏக்கர் எனும் பொழுது நிச்சயம் பலரின் நிலம் கைகொள்ளபடும் அதில் தாதுமணல் ஏரியாவும் உண்டு

விவகாரம் நிச்சயம் பெரிதாக வெடிக்கலாம், பெரும் போராட்டம் நடக்கலாம் ஆனால் இந்த மத்திய அரசுக்கு தமிழக போராட்டத்தை கட்டுபடுத்தும் வித்தை கைவிரலில் இருப்பதால் என்ன நடக்கின்றது என்பதை விரைவில் பார்க்கலாம்