வங்க வெற்றி இங்கு மறைக்கபட்டது
வங்கப்போரின் வெற்றி தேசத்தின் பெருமையினை உலகுக்கு சொன்னது, தேசம் முழுக்க பெரும் எழுச்சியும் இந்திய உணர்வும் பொங்கிற்று
1947ல் இருந்த அந்த எழுச்சி தமிழகத்திலும் வந்தது, இது திராவிட இயக்கங்களுக்கு பெரும் கவலையினை கொடுத்தது, தமிழர் தங்களை இந்தியராக கருதிவிடுவரோ என்ற பேரச்சம் ஏற்பட்டது
அவர்களுக்கு ஒரு அதிர்ஷ்டம் இருந்தது, அண்ணாவுக்கு பின்னரான அந்த சட்டமன்ற தேர்தல் 1971 மார்ச்சுக்கு பதிலாக 1972ல் நடந்திருக்குமானால் வங்க வெற்றியில் இங்கு காங்கிரஸே ஆட்சிக்கு வந்திருக்கும்
ஈட்டிக்கு தப்பியவனாக சுதாரித்து அச்சபட்டார்கள், ஈட்டிக்கு தப்பியவனாக சுதாரித்து அச்சபட்டார்கள்
விளைவு திமுகவில் ராமசந்திரன் சலசலப்பு ஏற்பட்டது, தமிழக கவனம் வங்கபோரில் இருந்து திரும்பி திமுக அரசியல் மேல் வந்தது. வங்க வெற்றி இங்கு மறைக்கபட்டது
தேச உணர்வினை மறைக்க இங்கு உலகம் சுற்றும் வாலிபன் சர்ச்சை அது இது என என்னவெல்லாமோ வலுகட்டாயமாக திட்டமிட்டு ஏற்படுத்தினார்கள் திமுகவினர்
இன்னொரு பக்கம் ராமன் படத்தை செருப்பால் அடிப்போம் என கிளம்பியது வீரமணி மணியம்மை கோஷ்டி
இந்தியாவுக்கு ஒரு வெற்றி என்றால் திமுகவுக்கும் திகவுக்கு ஒருநாளும் பொறுக்காது அல்லவா?
இதனால் ஆட்டம் கடுமையாக இருந்தது
மிக மிக கடுமையாக இவர்கள் ஆடினார்கள், தமிழகம் வங்க வெற்றியில் இந்திய உணர்வு பெற்றுவிட கூடாது என என்னவெல்லாமோ செய்து ஓலமிட்டார்கள்
இன்னும் திருந்தியிருக்கின்றார்களா என்றால் இல்லை, சென்னை ஆயுத கண்காட்சி முன் கருப்புகொடி, காஷ்மீர் விவகாரத்தில் அழிச்சாட்டியம் என இன்னும் திமுக மற்றும் திகவின் அடாவடி தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது
ஆனால் தமிழக மக்கள் 1970 போல் அல்ல, இப்பொழுது மகா கவனமாக இவர்களின் பொய் முகத்தை உணர்ந்து கொண்டே இருக்கின்றார்கள்