நம்மை பற்றி அவர்களுக்கு தெரியவில்லை என்பதை தவிர ஒன்றும் சொல்லமுடியாது

நாம் ஒரு கிறிஸ்தவன் என்பதால் நித்திசாமியினை பழிக்க தொடங்கியிருப்பதாக சிலர் கடுமையாக விமர்சித்துகொண்டிருக்கின்றார்கள்

நம்மை பற்றி அவர்களுக்கு தெரியவில்லை என்பதை தவிர ஒன்றும் சொல்லமுடியாது

இந்து மதத்தை மிக அணுக்கமாக பார்ப்பவன் எனும் முறையிலும் பண்டைய இந்து ரிஷிகள், அவதாரங்கள் வரிசையினை கவனித்தவன் என்ற முறையிலுமே சொல்கின்றோம்

துறவு வரிசை வேறு, அவதார வரிசை வேறு

ராமனையும் கண்ணனையும் தவிர எந்த அவதாரமும் அரசாண்டது இல்லை,, அய்யப்பனே அரசு வேண்டாம் என சொன்னவர்

ராமனும் கண்ணனும் கூட நிம்மதியாக ஆளமுடியாமல் கண்ணீரோடு ஒதுங்கினார்கள்

துறவு என்றால் என்ன என்பதையோ? ஆன்மீகம் என்றால் என்ன என்பதையோ அறிந்தவன் எம்மை பழிக்கமாட்டான்

நாம் அழுத்தமாக சொல்கின்றோம், நித்திக்கு ஒரு சில சக்திகள் உண்டு. ஆனால் அதை பயன்படுத்தி தன்னை ஒரு அரசனாக அவர் முடிசூட்டிகொள்ள நினைக்கின்றார்

இது தர்மத்துக்கும் அறத்துக்கும் எதிரானது, ஆனானபட்ட இயேசுவே ஒரு இடத்தில் மக்கள் தன்னை அரசனாக்கிவிடுவர் என அஞ்சி ஓடியிருக்கின்றார்

நித்தி துறவு கோலத்தில் அரசனாக நினைப்பது நல்லதல்ல, அறமுமல்ல‌

நித்தி பணம் செலவழித்து சக்தியினை பெறவில்லை, கடவுளிடம் காசுவாங்காமல் பெற்றதை இவரும் சல்லிகாசு வாங்காமலே மக்களுக்கு திருப்பிகொடுக்க வேண்டும்

இருந்து பாருங்கள், பெற்ற வரத்தை தவறாக பயன்படுத்திய எவனும் நிலைத்ததில்லை என்பது வரலாறு அது உங்களுக்கும் புரியும்

மற்றபடி நாம் கிறிஸ்தவ அடிமையாக இந்துசாமியினையும் அவர் தர்மத்தையும் பழிக்கின்றேன் என்பீர்களாயின் அதே நித்திசாமியின் மந்தகாச புன்னகையினை வீசியபடி உங்களை கடந்து செல்வதை தவிர ஒன்றும் செய்யமுடியாது