கடவுளின் கணக்குகள் மிக மிக ஆழமாக கவனித்தால் ஞானத்தால் கவனித்தாலன்றி புரியாது
ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியாவினை ஊடுருவும் வழியினை கிரேக்கர் தொடங்கி வைத்தனர், குப்த பேரரசு அலெக்ஸாண்டரின் செலூகஸை கட்டுபடித்தி வைத்தது அவனாலும் உள்ளே வரமுடியவில்லை
தொடர்ந்து வந்த கனிஷ்கர் உட்பட பல அரசர்கள் ஆப்கானியர்களை அடக்கியே வைத்தனர்,
இன்று சுத்தமான ஆப்கன் இனம் என அது இல்லை அங்கு கிரேக்க கலப்பு மங்கோலிய கலப்பு என எல்லாம் கலந்து இருக்கின்றது, யுத்தமும் கொள்ளையும் அவர்கள் ரத்தத்திலே ஊறியது
எனினும் ஆயிரம் வருடம் முன்புவரை சிக்கல் இல்லை, அன்று மகா வலுவான அரசு இந்தியாவில் இல்லை என்பதை ஆப்கன் கணித்தது
அது தோமராக்கள் வட இந்தியாவினை ஆண்ட காலம், தோமராக்கள் என்பவர்கள் ராஜபுத்திரர்களின் முன்னோடிகள், அவர்களுக்குள் பெரும் தலமை அதாவது குப்தர் கனிஷ்கர் போல பேரரசன் இல்லா நிலையில் சிதறி இருந்தனர்
இந்த நிலையில்தான் உள்ளே வந்தான் கஜினி
அது மங்கோலியருக்கு முற்பட்ட காலம்
சரியாக 1000 வருடங்களுக்கு முன்பாக மதுராவின் கிருஷ்ணன் கோவிலை இதே நாளில் அவன் தாக்கினான், அன்று மதுராவில் கண்ணனுக்கு பெரும் ஆலயமும் அதில் ஏராளமான செல்வங்களும் இருந்தன
அதை குறிவைத்து வந்த கஜினி பெரும் செல்வத்தை கொள்ளையடித்தான் அந்த களபேரத்தில் 50 ஆயிரம் மக்கள் செத்ததாக வரலாறும் சொல்கின்றது
அந்த கருவறை அவனால் சிதைக்கபட்டது, அந்த ஆலயம் குருவாயூர் அலயம் போல குழந்தை கண்ணனுக்கு அர்பணிக்கபட்டது என்கின்றார்கள், அது அவனால் அழித்தொழிக்கபட்டது
பின்பு அது அடையளளம் இழந்தது
ஆனால் இந்துக்கள் புதுப்பித்தார்கள் பின் அடுத்த ஐநூறு வருடங்களில் சிகந்தர் லோடி என்பவன் நொறுக்கினான் அதன் பின்னும் அந்த ஆலயம் மீண்டது
அவனுக்கு பின்னால் இருநூறு வருடத்தில் அவுரங்கசீப் மறுபடியும் நொறுக்கினான் அந்த ஆலயம் மறுபடியும் மீண்டது
வரலாற்றை படிக்கும் பொழுது இந்துக்களின் வலியினையும் நீண்ட நெடிய அவர்களின் போராட்டத்தையும் சேர்ந்து படிக்கவேண்டும்
ஆம் இந்த தேசத்தில் முதன் முதலான ஆப்கானிய தாக்குதல் (நாம் அவனை இஸ்லாம் மன்னன் என சொல்லவில்லை) கஜினியால் தொடங்கபட்டது, அவன் பெஷாவர் வழியாக மதுராவுக்குத்தான் வந்தான்
அவன் இந்தியாவில் ஆட்சி அமைக்க வரவில்லை மாறாக கொள்ளை அடிக்க வந்தான், எங்கெல்லாம், எந்த ஆலயத்தில் எல்லாம் செல்வம் கொட்டி கிடக்குமோ அங்கெல்லாம் எதிர்பாரா நேரம் வந்து கொள்ளை அடித்து அள்ளி செல்வது அவன் பாணி
அப்படித்தான் மதுராவில் அடித்தான், இன்னும் பல இடங்களில் அடித்தான் குஜராத்தின் சோமநாதபுரியிலும் அடித்தான், அள்ளி சென்றான்
அவன் இங்கு எந்த அரசையும் ஏற்படுத்தவில்லை மாறாக கொள்ளை ஒன்றே அவனின் நோக்கமாயிருந்தது
அவன் காட்டிய வழியிலே பின் கோரி வந்தான் அவன் தன் அடிமையினை ஆளவைத்தான் அதில் தொடங்கிய ஆப்கானிய ஆட்சி வெள்ளையன் வரும்வரை நீடித்தது
பாபரும் ஆப்கானியனே
ஆக ஆயிரம் வருடத்துக்கு முன்பாக இதே நாளில் இத்தேசம் முதல் ஆப்கானிய கொள்ளையினை சந்தித்தது, இந்த ஆயிரம் வருடத்த்தில் எத்தனையோ முறை தன் இந்து ஆலயங்களை அது இழந்தாலும் பின் மீண்டும் மீண்டும் அதை புதுப்பித்து கொண்டது
கிருஷ்ணன் ஆலயம் போல ராமனின் ஆலயத்தையும் அது மீட்டுகொண்டது
கஜினியால் நொறுக்கபட்ட சோமநாதபுரி ஆலயத்தையும் அது மீட்டுகொண்டது
தென்னாட்டவருக்கு இச்சிக்கல் புரியாது, காரணம் இங்கு ஆப்கானியர் வரமுடியாதபடி சோழரும் அவர்களுக்கு பின் நாயக்கரும் மராட்டியரும் பெரும் அரணாய் இருந்தனர்
ஆம் கஜினி வடக்கே அழிச்சாட்டியம் செய்தபொழுது சோழன் தெற்கே வலுவாய் இருந்தான், ராஜராஜ சோழனின் பெரியகோவில் அப்பொழுதுதான் கட்டபட்டது ஆனால் தொலைவு என்பதாலும் சென்றால் திரும்ப முடியாது என்பதாலும் கஜினி தென்னக பக்கம் வரவில்லை
கோரியின் அடிமைகள் வம்சம் மாலிக்காபூர் மூலம் மதுரை வரை வந்தன இங்கு கால்பதிக்க முயற்சித்தன, நாயக்க வம்சமும் வீர சிவாஜியும் எழும்பி அடித்தபின் அவர்களால் தென்னகம் வரமுடியவில்லை
தென்னகத்தில் இருந்த இந்த பாதுகாப்பு வடக்கே இல்லை இதனால் அவர்கள் இழந்ததும் அதிகம் வலியும் அதிகம்
ஆயினும் ஆயிரம் ஆண்டுக்குள் சிலிர்த்தெழுந்து தன் அடையாளங்களை மீட்டுகொண்டது இத்தேசம்
மதுரா எனும் வடமதுரையில் ஆயிரம் ஆண்டுக்கு முன் நடந்த அந்த கஜினியின் தாக்குதலும் கோரமும் எந்நாளும் இந்நாட்டின் நினைவுகளில் இருக்கவேண்டிய ஒன்று


மாறாக கஜினி என்பவன் 18 முறை படையெடுத்த தன்னம்பிக்கை வீரன் என்றெல்லாம் வரலாறு படிக்குமானால் அதைவிட முட்டாள்தனம் எதுவும் இருக்கமுடியாது
அவன் கொள்ளைக்காரன் இங்கு திருட்டுதனமாக வந்து கொள்ளை அடித்து ஓடிய கொள்ளையன், 18 முறையில் சிலமுறை வென்றான் பலமுறை தோற்று ஓடினான்
கொண்டு சென்ற செல்வத்தில் என்ன செய்தான் என்றால் ஒன்றுமே நிலைக்கவில்லை, அவனின் கஜினி மாவட்டம் இன்றும் சாபக்கேடில் சிதைந்து ஆப்கனில் இருக்கின்றது
ஆனால் பாரதமோ தன் புண்ணிய பூமியினை மறுபடியும் வளமாக மாற்றிகொண்டது, இதுதான் ரிஷிகளும் முனிகளும் மகான்களும் நடமாடிய பூமியின் மகத்துவம்
இந்த மண்ணும் மதமும் யார் எதை செய்தாலும் பொறுத்துகொள்ளும், பறித்தாலும் கொடுத்துவிடும்
ஆனால் ஆயிரமாயிரம் முறை அதை மீட்டு எடுத்துகொண்டே இருக்கும், அதன் தர்மமும் அது போதிக்கும் வாழ்வுமுறையும் தத்துவமும் அப்படியான ஞானத்தை கொண்டிருக்கின்றது
ஆப்கானியர் இங்கு வந்தது ஏன் என்றால் அதிலும் விஷயம் இருந்தது அன்று ஆப்கானியர் டெல்லிக்கு வந்திருந்தது அவர்களை பொறுத்தவரை வெற்றி, இந்துக்களை பொறுத்தவரை அழிவு
ஆனால் அன்று டெல்லியில் ஆப்கானியர் இருந்ததால் செங்கிஸ்கான் இங்கு வராமல் மேற்கு நோக்கி சென்றான், என்ன காரணத்தினாலோ அவன் டெல்லி பக்கம் வரவில்லை. அதற்கு வரலாற்று ஆய்வாளர் சில விஷயங்களை சொல்கின்றார்கள்
அவன் இந்தியாவினை பின்னாளைக்கு ஒத்திவைத்தான் என சிலரும், தங்கள் வந்த வழியில் செங்கிஸ்கானை வரவிடாமல் ஆப்கானியர் தடுத்தனர் என சிலரும் சொல்கின்றார்கள்
எப்படியோ செங்கிஸ்கான் வராமல் இந்தியா ஓரளவு தப்பித்தது அவன் வந்திருந்தால் ஒரு புல்லும் மிஞ்சியிருக்காது
செங்கிஸ்கான் இங்கே வந்திருந்தால் இன்றைய பஞ்சாப் வங்கம் உபி மபி எல்லாம் திபெத்தின் தொடர்சியாக சீனமாக இருந்திருக்கும்
அந்த ஆபத்து ஆப்கானியரால் நீக்கபட்டது
செங்கிஸ்கான் எனும் புயலில் இருந்து இந்தியாவினை காக்க வந்த ஆப்கானியர் பின்னாளில் பிரிட்டிசாரால் விரட்டபட்டனர், அதாவது இங்கு முழு இஸ்லாமிய நாடாக மாற இருந்த ஆபத்தினை பிரிட்டன் முறியடித்தது
பிரிட்டனை இத்தேசம் விரட்டி சுதந்திரம் பெற்றது
ஆம் இங்கு வர இருந்த எதோ ஒரு பெரும் ஆபத்தை ஆப்கானியரை கொண்டும், பின் அந்த ஆப்கானியரை பிரிட்டானியரை கொண்டும் பின் அந்த பிரிட்டானியரை ராம்பிரான் பக்தனான காந்தியினை கொண்டும் இத்தேசம் வெளியேற்றியது
இதெல்லாம் எங்கிருந்தோ எழுதி இயக்கபட்ட கணக்குகள், சராசரி மனதுக்கு விளங்கமுடியா கணக்குகள்
காலத்தின் கணக்குகளை புரட்டி பாருங்கள், இங்கு இறைவனால் அனுமதிக்கபட்ட சில விஷயங்களிலும் பல நல்ல விஷயங்கள் இருக்கும்.
கடவுளின் கணக்குகள் மிக மிக ஆழமாக கவனித்தால் ஞானத்தால் கவனித்தாலன்றி புரியாது
நடப்பெதெல்லாம் நன்மைக்கே என்பது அதுதான்