தனிநாடு அடைவது ஒன்றும் அவ்வளவு எளிதானது அல்ல

தனிநாடு அடைவது ஒன்றும் அவ்வளவு எளிதானது அல்ல, அது சாத்தியமென்றால் உலகின் ஒவ்வொரு பணக்காரனும் ஒரு தேசத்தை நிர்மானித்து ஆண்டுகொண்டிருப்பான்

பின்லேடன் என்றோ பூரண இஸ்லாமிய தீவு அமைத்திருப்பார், ஈழமக்கள் தற்காலிக தமீழீழம் அமைத்திருப்பர், தலாய்லாமா திபெத் தீவு அமைத்திருப்பார்

பணமும் வசதியும் இருக்கும் எல்லோரும் நாடு அடைந்திருப்பான்

இந்தோனேஷியாவின் தீவுகள் மட்டும் 15 ஆயிரத்துக்கு மேல் உண்டு, அங்கெல்லாம் 15 ஆயிரம் நாடுகள் உருவாகியிருக்கும்

உலகெல்லாம் கூடி ஒரு நாட்டை அங்கீகரித்து அது உலகில் நாடாக இணைய ஏகபட்ட விஷயங்கள் உண்டு, அதெல்லாம் நித்தி கடவுளானாலும் நடக்காது

ஒரு நாட்டின் தீவுகளை சில சக்திகள் ஒப்பந்த அடிப்படையில் எடுத்து தொழிற்சாலை ஆய்வு கூடம் இல்லை கேளிக்கை நிலையம் அமைக்கும்

அந்த உல்லாச நிலையத்துக்கும் நாட்டுக்கும் ஏகபட்ட வித்தியாசம் உண்டு

அங்கே தனிகொடி, தனி பாஸ்போர்ட் என்பதெல்லாம் சர்வதேச காமெடி. பார்த்து சிரித்துகொள்ளலாம் அவ்வளவுதான்

இனி கைலாச நாட்டின் அதிபர் நித்தி மோடியினை கண்டித்தார், அமெரிக்காவினை எச்சரித்தார் என செய்திகள் வரும்பொழுது கூடுதலாக சிரிக்கலாம்