இன துரோகி கட்சி என என்னிடம் சொன்னார் ஜெயா

ரமாவரம் தோட்டத்துல அய்யா ராமசந்திரன் எப்படி சர்க்கரை பொங்கல் கொடுத்து என்னை சாப்பிட சொன்னாரோ அப்படி ஜெயலலிதா அம்மாவினை நான் போயஸில் சந்தித்தபொழுது வெண்பொங்கலும் வடையும் சாப்பிட சொன்னார்கள்,

அதிலிருந்த முந்திரி ஈரான் நாட்டு முந்திரி, மிளகு அவங்க கொடநாடு எஸ்டேட்ல விளைஞ்சதாம்

அரைலிட்டர் நெய் ஊற்றி பொங்கலை கொடுத்தார்கள்

அப்புறம் நல்ல காப்பி, அந்த காப்பிபொடி பிரேசில்ல இருந்து வந்தது, பால் நியூசிலாந்துல இருந்து வந்ததாம், அவர் குடித்து ருசிபார்த்து பால், சீனி எல்லாம் சரிபார்த்து அதன்பின்புதான் எனக்கு குடிக்க தந்தார்கள்

நான் அவரை சந்தித்தபொழுது சசிகலா வீட்டில் இல்லை

பிரபாகரனையும் அவனின் ஈழ ஆட்சிபற்றியும் என்னிடம் கனிவாய் கேட்டுவிட்டு , நான் இல்லாவிட்டாலும் திமுகவினை விட்டுவிடாதே தம்பி, அது இன துரோகி கட்சி என என்னிடம் சொன்னார் ஜெயா