கருணாநிதி தொடங்கிவைத்த வாதம் அது
அந்த வாதம் ராஜிவ் கொலையில் திமுக சிக்கியதிலே இருந்து வந்தது, கருணாநிதி தொடங்கிவைத்த வாதம் அது
மிக சாமார்த்தியமாக 1983 தொடக்கத்தில் இருந்தே புலிகளை ஆதரித்த எல்லோரையும் விசாரிக்க வேண்டும் என கதையினை மாற்றபார்த்தார்
ஆனால் விசாரணை குழு என்ன அறிவாலய கூட்டமா? கைதட்ட ? அது தெளிவாக சொன்னது
“அய்யா, புலிகளை காங்கிரஸ் திமுக அதிமுக பாஜக என எல்லோரும் ஆதரித்த காலம் உண்டு,
ஆனால் என்று 1987 இந்திய அமைதிபடையினை அவர்கள் எதிர்த்து இந்திய ஒப்பந்தத்தை கிழித்து எறிந்தார்களோ அத்தோடு புலிகளை எல்லோரும் கைகழுவினர்
ராம்சந்திரன் அமைதிபடை செல்வதை எதிர்க்கவில்லை, எல்லா கட்சியும் இந்திய அமைதி ஒப்பந்தத்தினை வரவேற்றது
மாறாக புலிகளுக்கு ஆதரவாக அமைதிபடை திரும்பட்டும் என சொந்தநாட்டு ராணுவத்தையே பழித்தவர் நீர், உம் ஆட்சியில்தான் பத்மநாபா கொலை எல்லாம் நடந்தது. புலிகள் இங்கு ஈழத்தில் செய்யும் கொலைகளை எளிதாக செய்யும் அளவு ஆசிவழங்கியவர் நீர்
இன்னும் ஆண்டன் பாலசிங்கத்துக்கு வக்கலாத்து வாங்கினார் மாறன், கள்ளதோணியில் சென்று பிரபாகரனை பார்த்து அவனிடமிருந்து உமக்கு கடிதமும் வாங்கிவந்தார் வைகோ, இதெல்லாமே உம்மீது சந்தேகம் கொள்ள வைக்கின்றது” என்றபின் கருணாநிதிக்கு பேச்சே வரவில்லை
அது பின்பு காங்கிரஸ் அமைச்சரவையில் தயாநிதிமாறன் அமைச்சரானபின்புதான் வந்தது, சோனியா இதை எல்லாம் பார்த்துகொண்டிருந்தார்