ஜெயா மறுபடி பிறந்துவரட்டும்

ஆயிரம் சொல்லுங்கள் அவர் அக்கியூஸ்டாகவே இருக்கட்டும்

முரசொலிமாறன், வைகோ திமுக ஊடாக ராஜிவ் கொலைக்கு பின்னும் இங்கு தலையெடுக்க முயன்ற புலிகளை அவர் அடக்கி வைத்தவிதம் தேசபற்றுமிக்கது

திமுகவினரின் ஆட்டங்களை அவர்போல் அடக்கியவர் யாருமில்லை, மதுகடைகள் என்ற பெயரில் திமுகவினர் அபகரித்த கடைகளும் கட்டங்களும் கொஞ்சமல்ல, அதை முடக்கத்தான் கடைகாரர்களுடன் கடை நடத்துவோர் முறையான ஒப்பந்தம் செய்யவேண்டுமென்றார்

அதையும் மீறி அட்டகாசங்கள் பார் வடிவில் வந்தபொழுது டாஸ்மாக்கை அரசே நடத்தும் போங்கடா என்றார், திமுகவுக்கு அது பலத்த அடி

ஆனால் மக்களின் சொத்துக்கள் காக்கபட்டன‌

தன் வாக்குவங்கியில் முக்கியம் மறவர் இனம் என தெரிந்தும் கந்துவட்டியினை ஒழித்தது அவரின் மாபெரும் வெற்றி, அடக்கி ஒடுக்கி வைத்திருந்தார்

திமுகவினர் செய்த நில ஆக்கிரமிப்பு கொஞ்சமல்ல அதை ஒடுக்கத்தான் தனி சட்டமே இயற்றினார்

லாட்டரி ஒழிப்பு என கருணாநிதியின் பினாமி மார்ட்டினை ஓட அடித்தது முதல் அவர் செய்த அதிரடிகள் ஏராளம்

ரவுடிகள், பெரும் தாதாக்கள் எல்லாம் நடுரோட்டில் செத்துகிடந்தனர், எஞ்சியோர் தலைதெறிக்க ஓடினர்

பொய் பத்திரிகை இம்சைகளை அவர் கட்டி வைத்து அடித்தது போல இன்னொரு முதல்வர் செய்யமுடியாது

அரசு ஊழியர்கள் எனும் பூனைகளுக்கு முதலில் மணி கட்டிய முதல்வர் அவர்தான், அதுவரை எல்லா முதல்வரும் அவர்களை வணங்கிகொண்டிருந்த பொழுது துணிந்து அடித்து சாத்தி முழங்காலில் நிறுத்தியவர் அவர்தான்

தவறு செய்தவன் தன் கட்சியில் எந்த கொம்பன் என்றாலும் அவனை முழங்காலில் நிறுத்தி கதற வைத்து பதவி பிடுங்கி அனுப்புவதில் அவர் கவனமாயிருந்தார், மற்ற கட்சியில் இதை காணமுடியாது

யாரை எங்கு வைக்கவேண்டுமோ அங்கு வைத்தார், ஈழ இம்சைகள் அடங்கி கிடந்ததும், விஜயண்ணா “அம்மா.. பிளீஸ்மா” என முழங்காலில் நின்றதும் மறக்கமுடியாதவை அல்ல‌

நினைத்து பார்த்தால் அந்த ஜெயாவின் ஆட்சி சரியாகத்தான் இருந்திருகின்றது, ஆனால் சசிகலா எனும் அங்குசம் அந்த யானையினை அடக்கியிருக்கின்றது

ஜெயா மறுபடி பிறந்துவரட்டும், சசிகலா மறுபடி பிறக்க வேண்டாம் பிறந்தாலும் ஜெயா பக்கம் வரவே வேண்டாம்