காவல்துறை நாடுமுழுக்க வலுவாகியுள்ளது
இப்பொழுதெல்லாம் காவல்துறை நாடுமுழுக்க வலுவாகியுள்ளது, பொதுவாக ராணுவம் போல் காவல்துறையும் மத்திய அரசின் கட்டுபாட்டுக்கு வரவேண்டும் என்ற குரல் நெடுங்காலமாக உண்டு
மோடி அரசு அந்த திட்டத்தில் இருப்பதால் என்னவோ எல்லா மாநில காவல்துறையும் தங்களை வலுபடுத்திகொள்கின்றன
தமிழக காவல்துறை பாத்ரூம் தளத்தினை சரியாக வைத்து குற்றவாளிகளை தண்டிக்கின்றது, ரவுடிகள் ஆட்டம் தமிழகத்தில் இப்பொழுது குறைவு
தெலுங்கானாவில் நடந்த மகா கொடூர சம்பவமான அந்த மருத்துவரை கொன்ற விவகாரத்தில் 4 பேரையும் சுட்டு கொன்று அதிர வைத்திருக்கின்றது தெலுங்கானா காவல்துறை
தெலுங்கானாவின் கவர்ணர் நம் தமிழிசை அக்கா என்பது குறிப்பிடதக்கது, அக்கா கவர்ணராக இருக்குமிடத்தில் பெண்களுக்கான அநீதி துளிர்த்துவிட முடியாது
இந்தியாவில் சட்டம் என நீதிமன்றத்தில் ஒன்று இருக்கும், அது பன்னெடுங்கால மென்மையான சட்டம், சாட்சிகள் இன்னபிற என குழப்பமான சட்டம்
இதே 4 பேரையும் நீதிமன்றத்தில் நிறுத்தினால் , யார் முதலில் கற்பழித்தான்? எவன் கற்பழிக்கும் போது உயிர்போனது? எவன் முதலில் கொளுத்தியது? சாட்சி யார்? என ஏகபட்ட ஓட்டைகள் உண்டு
கடைசியில் மிஞ்சி போனால் தூக்கு கிடைக்கும் பின்பு ஆயுளாக குறைப்பார்கள், ஒரு தலைவன் பிறந்தநாளில் இந்த காம ஆய்வாளர்கள் வெளிவந்து தங்கள் ஆய்வினை தொடங்குவார்கள்
நீதிமன்ற சட்டம் திருத்தபடும் வரை இம்மாதிரி காரியங்களுக்கு அவசர சட்டம் இயற்றி தண்டிக்கும் காவல்துறை மிக சரியானது
இது நாடுமுழுக்க தொடரபட வேண்டும், அப்பெண் கொல்லபட்ட இடத்திலே அவர்கள் 4 பேரையும் சுட்டு கொன்றிருப்பது இச்சமூகத்துக்கு சரியான தீர்ப்பு
இது நாடுமுழுக்க பரப்பட வேண்டும், எங்கெல்லாம் பெண்களை பொருளாக, ஆடு மாடாக நினைத்து சீண்டுகின்றார்களோ அங்கெல்லாம் இந்த தீர்ப்பு நடக்கட்டும்
ஒருவன் தன்னிலை அறியவேண்டும் அப்படி அறியாமல் கொடுங்குற்றம் புரிபவனுக்கும் , புரிய தயாராகுபவனுக்கும் இதை தவிர என்ன தண்டனை உண்டு?
அவன் மனிதனல்ல மிருகம், மிருகத்துக்கு சாட்டையும் , கொடும் ஆயுதமே பேசவேண்டிய மொழி..