தவறு மனிதனின் சோம்பலிலும் சரியான திட்டமிடாதலிலும் இருக்கின்றது

ஆளாளுக்கு வெங்காய விலை கூடிவிட்டதாக ஒப்பாரி, சரி வெங்காய விலை குறைய இவர்கள் எந்த வெங்காயத்தை விளைய வைத்தார்கள் என்றால் ஒன்றுமில்லை

தமிழ்நாட்டுக்கான வெங்காய உற்பத்தி இங்கு அதிகம் கிடையாது, வரவேண்டியதெல்லாம் வடக்கே இருந்துதான் வரும். அங்கே மழை உட்பட பல காரணங்களால் உற்பத்தி பாதிப்பு

ஏதோ மோடியும் அமைச்சரவையும் வெங்காய உற்பத்திக்கு அனுப்பபட்டவர் போலவும் அவர்கள் சரியாக விளைவிக்கவில்லை போலவும் ஏக பிதற்றல்கள்

தமிழகம் வெங்காயத்துக்கும் அடுத்த மாநிலத்தை அண்டியிருக்கின்றது என்பதை ஒப்புகொள்ள ஒரு பயலும் தயாரில்லை, இதில் தனிநாடு கனவு வேறு

ஆனால் ஒரு விஷயம் உறுதியாக சொல்லமுடியும்

ஒரு நாடு விவசாயத்தில் இருந்து தொழில்துறைக்கு மாறும்பொழுது பல கணக்கீடுகளை செய்யும்

அதாவது விவசாய மக்கள் தொழில்துறைக்கு திரும்பும்பொழுது விவசாயம் பாதிக்கபடும் அப்பொழுது எப்படி விவசாய பொருள் உற்பத்தியினை ஈடுகட்டுவது என்பது

இதனால் பெரும் நாடான சீனா போன்றவை ஆப்ரிக்காவில் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பண்ணையில் முதலீடு செய்யும்

அங்கிருந்து தன் நாடுகளுக்கு பலன்களை பெற்றுகொள்ளும், சீனா இதில் கில்லாடி ஆப்ரிக்காவும் லத்தீன் அமெரிக்காவும் அவர்களுக்காக விளைய வைத்து அனுப்புகின்றன‌

உள்நாட்டு உற்பத்தியினை விட அங்கு செலவு குறைவு என்பது இன்னொரு விஷயம்

இந்தியாவும் இம்மாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது இல்லையே இன்னொரு வாய்ப்பு உண்டு

சீன மாவோ பாணியில் சும்மா சுற்றிகொண்டிருக்கும் பயல்கள் முதுகில் மிதித்து விவசாயம் பார்க்க அனுப்புவது அது, ஆனால் அது சர்வாதிகாரமாகிவிடும்

இதில் ஜப்பானிய பாணியினை பின்பற்றலாம்

ஆம் ஒவ்வொரு குடிமகனும் ஏதேனும் 5 காய்கறியினை தன் வீட்டில் வளர்க்க வேண்டும், அதை அரசு கொள்வனவு செய்யும், ஒவ்வொருவரும் ஏதேனும் 5 வகை காய்கறி என்றால் ஒரு சந்தை அளவு குவியும், அவரவர்க்கு தேவையானதை பெறலாம்

அது பிரதமரோ இல்லை தொழிலாளியோ வளர்த்தே தீரவேண்டும்

இந்தியாவும் இந்நிலைக்கு வந்தால் இம்மாதிரி சிக்கல் எளிதில் ஒழியும்

ஆம் இயற்கை அள்ளிதர தயாராகத்தான் இருக்கின்றது, நிலமும் நீரும் கொட்டித்தான் கிடக்கின்றது

தவறு மனிதனின் சோம்பலிலும் சரியான திட்டமிடாதலிலும் இருக்கின்றது, அதை சரிசெய்து வருங்கால சமூகத்துக்கு நல்வழிகாட்டாமல் அதையே சொல்லி அரசியல் செய்வது இங்கு குழப்பத்தை ஏற்படுத்துமே தவிர தீர்வு சொல்லாது