திமுக கோஷ்டிகள் மறுபடியும் சர்வாதிகாரியினை தெருவில் இழுத்துவிட கிளம்பிவிட்டன

திமுக கோஷ்டிகள் மறுபடியும் சர்வாதிகாரியினை தெருவில் இழுத்துவிட கிளம்பிவிட்டன, ஏற்கனவே கம்யூனிஸ்ட் அல்லது மற்ற அல்லக்கைகளை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளாட்சி தேர்தலை தடுக்கும் வித்தை தெரியாமல் தானே வழக்கு தொடுத்து சிக்கிவிட்டது திமுக‌

இதென்ன இவர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் இவ்வளவு சங்கடம்? என ஒரு மாதிரி முறைக்க தொடங்கிவிட்டது தமிழகம்

திமுக என்பது சித்துவிளையாட்டு கூடமாக இருந்தது, இப்பொழுது வெத்து விளையாட்டு ஆடி சிக்கிகொள்கின்றார்கள்

இப்பொழுது என்னாயிற்று?

ஐதராபாத்தில் குற்றவாளிகள் கொல்லபட்டதில் தேசமே சரி என ஒப்புகொள்ளும் பொழுது திமுகவினர் இது மனித உரிமை மீறிய செயல் என கிளம்பிவிட்டார்கள்

இனி என்னாகும்? இது டிஜிட்டல் உலகமல்லவா? அதனால் அதேதான்

இந்தியாவில் மனித உரிமை இல்லை, துப்பாக்கி சூட்டில் விசாரணை இன்றி 4 பேர் பலி இதை கண்டித்து திமுக எனும் கட்சி போராடுகின்றது என பாகிஸ்தான் செய்தி வாசிக்கும்

இதுபோல பல நாடுகளும் இந்தியாவில் மனித உரிமை இல்லை என திமுக பொங்குவதாக எழுதும்

இதன் பின் சர்வாதிகாரி சிக்கலில் விழுவார், ஏதாவது புலம்புவார்

அவரை புலம்ப வைப்பதில்தான் திமுகவினருக்கு எவ்வளவு ஆனந்தம்?

ஒருவேளை இவர் ஆட்சி கலைக்காமல் சுற்றுகின்றார் என‌ பழிவாங்குகின்றார்களோ? இருக்கலாம்..