ஸ்பெஷல் மசாஜ் சட்டபூர்வம்

தாய்லாந்து அழகிய நாடு மட்டுமல்ல, அழகு பெண்கள் நிறைந்த நாடும் கூட. பர்மா போல இயற்கைசெல்வம் நிறைந்த விவசாய நாடு, ஷயாம் என அழைக்கபட்ட காலத்திலே அதன் பெருமை அதிகம்

இன்றுவரை உலகில் யாருக்கும் அடிமையாகாத நாடு அது

அந்த தாய்லாந்தில் கேளிக்கைகள் அதிகம்,இந்த மசாஜ் போன்றவையும் உண்டு தாய்லாந்தின் மலைகளில் ஒருகாலத்தில் போதைபொருள் அதிகம் விளைவிக்கபட்டது. அதாவது வருமானத்துக்காக மக்கள் செய்த தொழிலில் அதுவும் ஒன்று

போதை பொருள் விளைச்சலை தடுக்க எண்ணிய அரசு , மசாஜ்களை கண்டுகொள்ளவில்லை அது வளர்ந்தது

வியட்நாம் போரில் அமெரிக்க வீரர்கள் புத்துணர்ச்சிக்காக அங்கு அனுப்பபட்டனர், புத்துணர்ச்சி பெற்றனர் அதிலிருந்து தாய்லாந்து மசாஜ் உலக பிரசித்தம் ஆனது

உண்மையில் உடம்புபிடி என அழைக்கபடும் அந்த மசாஜ் கேரள ஆயுர்வேத மருத்துவம் போன்றது, சீன மசாஜ் போன்ற மருத்துவம் அது, தாய்லாந்திலும் ஒரு காலத்தில் அப்படி இருந்தது, இன்றும் அங்கு மருத்துவ மசாஜ்கள் உண்டு

ஆனால் அதற்கான அடையாளம் இப்பொழுது பாலியல் மசாஜ் என மாறிவிட்டது

தாய்லாந்து சென்று வந்தவர்களை எல்லாம் ஜனகராஜ் ஸ்டைலில் சிரிக்கும் உலகிது, அதை பற்றி எல்லோருக்கும் எல்லாம் தெரிந்துவிட்டது

இந்நிலையில் தாய்லாந்து சுற்றுலாதுறை இனி எம் நாட்டில் சில ஸ்பெஷல் மசாஜ் சட்டபூர்வம், இதனால் இனி உலக ஆண்கள் எல்லாம் ஓடிவருவார்கள் என மகிழ்ந்தபடி சொல்கின்றார்

ஒருவகையில் இவரை நினைத்தால் பாவமாக இருக்கின்றது, உலகிற்கெல்லாம் தெரிந்த விஷயம் இவருக்கு இப்பொழுதுதான் தெரியும் போல என தலையில் அடிக்கின்றது உலகம்

முழுக்க நனைந்தபின் முக்காடு எதற்கு? எல்லாம் தெரிந்தபின் உள்ளாடை எதற்கு என்ற முடிவில் தாய்லாந்து வந்துவிட்டது என்பது புரிகின்றது.