கிராமங்கள் போர்கோலம் பூண்டாயிற்று
உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கபட்டவுடன் ஆளாளுக்கு வாளை உருவி களத்தில் குதித்தார்கள், பின் திமுகவும் அதிமுகவும் ஆசைபட்டபடி நகராட்சி மற்றும் மாநகராட்சிக்கான தேர்தல் இல்லை என்றதும் பெருவாளியான வாள்கள் உறைக்குள் சென்றன
திமுகவும், அதிமுகவும் நிம்மதி பெருமூச்சு விட்டன, கம்யூனிஸ்ட்டுகள் போன்றவை சில கோடிகள் வருமானம் போனதால் கடும் அப்செட்டில் இருந்தன
இப்பொழுது ஊராட்சிமன்றங்களுக்கான தேர்தல் நடத்தலாம் என அறிவிக்கபட்டுவிட்டதால் ஆளாளுக்கு கிராமங்களில் உருவிய வாளோடு சுற்றிகொண்டிருக்கின்றார்கள்
கிராமங்கள் போர்கோலம் பூண்டாயிற்று, இந்த போர் தெரு முதல் உள்வீடு வரை நடக்கும்
மூவகை ஆசை என ஞானிகள் சொன்னதில் இந்த பதவியும் புகழும் மண்ணாசையில் அடங்கிவிடுகின்றது
அதிகாரம் ஒரு போதை, ஒருமுறை சுவைத்துவிட்டால் விடமுடியா போதை. மாபெரும் பாதகங்களுக்கும் பாவங்களுக்கும் அக்கிரமத்தின் எந்த எல்லைக்கும் செல்ல தூண்டும் போதை அது
அதிகாரத்தோடு வருமானமும் சேர்ந்துவிட்டால் அதோ கதி
ஊராட்சிமன்ற போர்கோல காட்சிகள் அதை கண்முன் காட்டுகின்றன..