உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மாட்டோம் : கமலஹாசன்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மாட்டோம் : கமலஹாசன்

பரம்பரை பூசாரிக்கும், பஞ்சத்தில் பூசாரியானவனுக்கும் வித்தியாசம் உண்டு என்பார்கள். திமுக அதிமுக முதல் வகை

கமலஹாசன் இரண்டாம் வகை

அன்னார் இப்பொழுதெல்லாம் அந்த பூஜகுமாரியுடன் சுற்றிகொண்டிருப்பார், பாராளுமன்ற தேர்தல் என்றால் டார்ச் லைட்டை தூக்கி வந்து டிவி உடைப்பார்.

ஆக எழும் சந்தேகம் என்ன?

பாராளுமன்றத்தில் திமுக சார்பு ஊடகங்களில் இவருக்கு விளம்பரம் கனிசமாக வந்தது, ஏன் இவருக்கு மட்டும் வந்தது?

எங்கோ ஒரு ஒப்பந்தம் நடந்திருக்கின்றதா இல்லையா?

இப்பொழுதும் மாநகராட்சிகள் தேர்தல் என்றால் கமலஹாசன் ஒதுங்கியிருக்கமாட்டார்

ஆக திமுகவுக்கு எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் கமலஹாசன் களமிறங்குவார், இல்லாவிட்டால் இறங்கமாட்டார்

கடந்த பாராளுமன்ற தேர்தலில் 4 தொகுதிகளில் கமலஹாசனால் திமுக வெற்றிபெற்றிருந்தது குறிப்பிடதக்கது