பெரியம்மையும் சின்னமையும் தமிழகத்தில் வேறு வடிவில் வந்தன‌

பெரியம்மை (small pox) , சின்னம்மை (chicken pox) என பல நோய்கள் அக்கால உலகில் இருந்தது. இன்று மத ,சாதி கலவரங்களுக்கு இருக்கும் பயம் அன்று அந்த நோய்க்கு இருந்தது

வந்துவிட்டால் சில விக்கெட்டுகளை அல்ல, சுனாமி போல வாரி சுருட்டிவிட்டு செல்லும்

இந்நோய்க்கு பின்னர் மருந்து கண்டுபிடிக்கபட்டது, இதே நாளில் 1980ல் பெரியம்மை நோய் உலகில் இருந்து அகற்றபட்டதாக ஐ.நா சொன்னது

அதன் பின் யாரும் அந்நோயால் சாகவில்லை.

ஆனால் இதே பெரியம்மையும் சின்னமையும் தமிழகத்தில் வேறு வடிவில் வந்தன‌

கிட்டதட்ட 30 ஆண்டுகள் கடுமையாக பாதித்தது, தமிழகம் கடும் அவஸ்தைபட்டது

அப்படி ஒரு அவஸ்தை, அது படுத்தியபாட்டின் பல வடுக்கள் தமிழகமெங்கும் இருக்கின்றன‌

இதில் பெரியம்மை இப்பொழுது இல்லை, சின்னம்மை வைத்தியசாலையில் முடக்கபட்டு, அதை முற்றிலுமாக தடுக்கும் கட்டத்தில் இருக்கின்றது.

பழைய வீரியம் இல்லை என்பதால் இப்போதைக்கு ஆபத்தில்லை

இதனால் உலகம் போலவே பெரியம்மை சின்னம்மை நோயிலிருந்து தமிழகமும் விடுபட்டாலும் பெரியம்மை விட்டு சென்ற கிருமிகளின் தாக்கம் ஓரளவு இருக்கின்றது

எனினும் பெரியம்மை தானாய் ஒழிந்தது , ஆபத்தான‌ சின்னம்மையினை ஒழித்தது யாரென்றால் எடப்பாடி பழனிச்சாமி என்பவராவார். ஆனால் அவரைபற்றி ஐ.நா சபைக்கே தெரியவில்லை