பிராமணர் ஏன் வெங்காயம் சேர்ப்பதில்லை?
பிராமணர் ஏன் வெங்காயம் சேர்ப்பதில்லை என ஒரு கோஷ்டி கிளம்பிவிட்டதுஇயற்கையில் விளையும் விஷயங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு குணம் உண்டு, அவ்வகையில் நிலத்துக்கு அடியில் விளையும் எதையும் உண்ண கூடாது என்பது சித்தர்கள் வலியுறுத்துவம் தத்துவம்கந்தமூலம் வேண்டாம் என்பது சித்தர் வாக்கு.அவ்வகையில் கிழங்கு வகைகளும், வெங்காயம், பூண்டும் , இஞ்சியும் விலக்கபட்டவைஇவை அதிகம் உண்டால் ஒருவகையான மூர்க்ககுணம் உருவாகும் , மூளை மழுங்கும் என சித்தர்கள் சொல்லியிருக்கின்றனர்((ஆனால் காய்ந்த இஞ்சியினை சுக்கு என மருந்தாக பயன்படுத்தவும் அவர்கள் தவறவில்லை, வேரில் விளைவது வேண்டாம் என்றார்கள்,காய்ந்த வேரினை மருந்தாக சில இடங்களில் பயன்படுத்தவும் சொன்னார்கள்)இந்து மதம் விஞ்ஞானத்தையும் உடல்நலத்தையும் சார்ந்த மதம், கடவுளுக்கு படைக்கபடும் எல்லாமும் உடலுக்கு நலம் சேர்க்கும் விஷயங்களாய் இருந்தன, அவை பிரசாதம் என இன்றும் வழங்கபடுகின்றனபால், நெய், வாழைபழம், வெற்றிலை, துளசி என எல்லாம் உடலுக்கு நலம் சேர்க்கும் விஷயம்(இப்பொழுதெல்லாம் சில ஆலயங்களில் ஆப்பிள், ஆரஞ்சு எல்லாம் கொடுக்கின்றார்கள். இது தவறானது. ஆப்பிள் இந்தியாவுக்கான பழம் அல்லகேரட், பீட்ரூட், உருளைகிழங்கு எல்லாம் தமிழர் உணவு அல்ல, வெள்ளையன் காலத்தில் இறக்குமதியான வியாபார பயிர்கள்)எந்த ஆலயத்திலும் கந்தமூலமாக கிழங்கு மற்றும் வெங்காயம் வழங்கபடுவதில்லை, ஆம் அவை சில காரணங்களுக்காக விலக்கபட்டனசித்தர்கள் சில காரணங்களுக்காக அவற்றை விலக்க சொன்னார்கள், சித்தர்களை விடுங்கள் இன்றைய விஞ்ஞானம் என்ன சொல்கின்றது?கிழங்கு வகைகள் வாயு தொல்லையினை வளர்க்கும், அதனால் வயிற்றில் சிக்கல்கள் உருவாகும்வெங்காயத்துக்கு இரு குணங்கள் உண்டு, ஒன்று கொழுப்பை குறைக்கும் இன்னொன்று உணர்ச்சியினை கூட்டும்வெங்காயத்தையும், பூண்டையும், இஞ்சியினையும் மாமிசம் உண்போர் தாரளமாக பயன்படுத்தலாம் காரணம் உடலில் கொழுப்பு குறைந்து சமநிலை பெருகும்ஆம் இந்த மூன்றுமின்றி மாமிசம் உண்பது கெடுதல்ஆனால் பிராமணர் அசைவம் தவிர்ப்பவர் என்பதால் வெங்காயமும் பூண்டும் சேர்ப்பதில்லை, சேர்த்தால் அது அவர்களுக்கு உடல்நிலை பாதிப்பை கொண்டுவரும், உடலின் சமநிலை பாதிக்கபட்டு பெலன் குறைவு ஏற்படும்.அவர்களின் முக்கிய உணவான நெய்யும் சர்கரையும் கொடுக்கும் சக்தி வெங்கயாத்தால் கரைக்கபட்டால் உடல்நிலை கெடும்இதைத்தான் சித்தர்கள் கந்தமூலம் வேண்டாம் என்றார்கள், அதைத்தான் பிராமண சமூகமும் பின்பற்றி வருகின்றதுகட்டுபாடான வாழ்வுக்கும் மதத்துக்கும் கட்டுபாடான உணவு மகா அவசியம் என்பதை சித்தர்கள் வலியுறுத்தினர், ரிஷிகளும் ஞானிகளும் அப்படித்தான் வாழ்ந்தனர்ஆலயங்களின் வழிபாட்டை தாங்கிநின்ற பிராமண சமூகமும் அதை பின்பற்றியதுமற்ற சமூகம் உடல் உழைப்பு சமூகம் என்பதால் எல்லாவற்றையும் உண்ணவேண்டிய அவசியம் இருப்பதால் மாமிசத்தை வெங்காயத்தோடு உண்டதுசித்தர்களும் ஞானிகளும் வெங்காயத்தை விலக்கும் அவசியத்தை சொன்னார்கள், அது ஞானவழி ஆன்மீக வழியில் செல்பவர்களுக்கேஅது பிராமணனுக்கு மட்டுமல்ல, மனதையும் உடலையும் அடக்க நினைக்கும் எல்லோருக்குமான போதனையன்றி வேறல்ல..