வங்கத்து பிராமணர்கள் மீன் உண்பார்கள்

ஆம் வங்கத்து பிராமணர்கள் மீன் உண்பார்கள்அது ஏன் மற்ற பிராமண இனம் அதை ஒதுக்கி வைக்க வங்கத்தவர் மட்டும் உண்கின்றார்கள் என்றால் விஷயம் இல்லாமல் இல்லைமீனை அவர்கள் காய்கறிவகையில் சேர்க்கின்றார்கள், ஏகபட்ட ஞானிகளும் ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் என எத்தனையோ யோகிகளையும் கொடுத்த வங்கம் இதை ஏன் அனுமதித்தது?அக்கால ரிஷிகள் அதை அனுமதித்தார்கள் ஏன்? பின்னாளில் அதற்கான விடையினை விஞ்ஞானம் சொன்னதுகங்கா நதி வங்கத்தில் வரும்பொழுது அந்த மண்ணோடு கலந்து நீரின் ஒரு சக்தியினை இழந்துவிடுகின்றது, அதாவது உடலுக்கு தேவையான ஒரு சத்து இல்லாமல் போகின்றதுவங்கம் தங்கமாக விளையும் அளவுக்கு மகா வளமாக இருந்த அந்த மண்ணில் ஓடும்பொழுது கங்கை நதிக்கு சில மாற்றங்கள் விளைகின்றன‌அந்த நீர் குடிநீராக மாறும்பொழுது சில சத்துக்கள் குறைகின்றன, அதை ஈடுகட்ட மீன் உணவு அவசியம்இதனால் மீன் அங்கு காய்கறிபட்டியலில் வந்து இடம்பிடித்தது, அந்த மண்ணில் மீன் இன்றி வாழ்வது உடல்நலத்தை பேணமுடியாது என்பதால் இந்த ஏற்பாடுஇதை எல்லாம் அக்காலத்திலே உணர்ந்து இப்படி விதிவிலக்கு கொடுத்து வைத்திருந்தனர் ஞானிகள், பிற்கால விஞ்ஞானம் அதற்கான காரணத்தை சொன்னது, விஷயம் அவ்வளவுதான்