நாமே கடந்த வருடம் சோனியா பற்றி எழுதினோம், மறுக்கவில்லை

ஆம், நாமே கடந்த வருடம் சோனியா பற்றி எழுதினோம், மறுக்கவில்லை

ஆனால் தேர்தல் முடிவுகள் காட்டியதென்ன?

புலிகளின் வரலாற்றை படித்தால் தெரிவதென்ன? ஏன் அவர்களை ஒழிக்காமல் நீட்டினார் சோனியா? புலி கொலையாளிகளை மன்னிக்க ஏன் கடிதம் எழுதினார்?

சோனியா வந்தபின் இந்திரா குடும்பத்தில் நடந்த மர்மங்கள் என்ன? குவோத்ரோச்சி எப்படி வந்தான்? கடைசிவரை அவனை பிடிக்காமல் ஏன் சோனியா நழுவினார்

சோனியா காலத்தில் எல்லா ஆயுத தரகையும் இத்தாலியரே செய்தது ஏன்?

ரபேல் விமானங்களை பிரான்சிடம் இருந்து வாங்குவதை தடுக்க காங்கிரசை தூண்டிய சக்தி எது?

2008 மும்பை தாக்குதலுக்கு பின் யுத்தத்தை ஏன் சோனியா அறிவிக்கவில்லை, பதிலடி கொடுக்க ஏன் தயங்கினார்?

இன்னும் ஏராளமான மர்ம பக்கங்கள் உண்டு

நாம் அன்று ஒரு பக்கத்தை எழுதினால் இன்னொறு முறை மறுபக்கத்தையும் எழுதுவோம்

ஏ தமிழ்நாட்டு மானங்கெட்ட காங்கிரஸ் ஜென்மங்களே, உங்களுக்கு ஒன்றை உரக்க சொல்கின்றேன்

1967ல் காங்கிரஸ் அரியணை இங்கு வீழ்ந்ததது, மறுபடி அது 2006ல் இங்கு அரியணை ஏற வாய்ப்பு இருந்தது

ஆம் காங்கிரஸ் பலத்திலேதான் இங்கு திமுக ஆட்சி நிலைத்தது, மத்தியில் திமுக விலகினால் அதை இன்னொரு கட்சிமூலம் காங்கிரஸ் தாங்கியிருக்கும்

ஆனால் மாநில நிலை அப்படி அல்ல, காங்கிரஸ் இல்லாவிடில் திமுக அரசு நிலைத்திருக்காது

ஆனால் இங்கு காங்கிரஸை கூட்டணி ஆட்சி என ஏன் சோனியா அரியணை ஏற்றவில்லை? ஏன் அஞ்சினார்? எதற்கு தயங்கினார்?

நீங்கள் கேள்வி கேட்க வேண்டியது கருணாநிதியிடம் ஏமார்ந்த‌ உங்கள் தலைவியினை என்னை அல்ல..

தமிழக காங்கிரசுக்கு மாபெரும் அநீதி இழைத்தவர் சோனியா, அதை காலம் உங்களுக்கு காட்டும்

போங்கடா டேய்..