காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து அடுத்த மாபெரும் நல்லவிஷயத்தை செய்திருக்கின்றது இந்த அரசு
ஒரு நாடு நல்லமுறையில் இயங்க தன்னாட்டு குடி கணக்கு மகா முக்கியம், வரலாற்றில் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பே இதை செய்தான் அகஸ்டஸ் சீசர்.
அவன் அரசு செல்வம் கொழிக்கும் பேரரசாய் இருந்தாலும் எல்லா நாட்டு மக்களும் வந்து குவிந்ததில் அவன் குடிகள் பாதிக்கபட்டன, அரசுக்கு எதிரான காட்சிகளும் தலையெடுத்தன
இதனால் தன் நாட்டு மக்கள் தங்கள் சொந்த ஊரில் சென்று தங்களை பதியும் படி நுட்பமான சட்டத்தை பிறப்பித்தான், சொந்த ஊருக்கு சென்று இன்னாரின் மகன் அல்லது பேரன் என தகுந்த ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டும்
அந்த நேரம்தான் இயேசு பெத்லகேமில் பிறந்தார், அவர் தந்தை வேற்றூரில் இருந்தாலும் சொந்த ஊர் பெத்லகேம்
ஏன் சொல்கின்றோம் என்றால் குடிகணக்கு எல்லா காலமும் எல்லா நாட்டிலும் உண்டு
ஒரு விவசாயி தன் தோட்டத்து பயிர்களுக்கு நீர் இறைக்கும் பொழுது அது மற்றவன் வயலுக்கு செல்ல சம்பதிப்பானா? இல்லை மாற்றான் அவன் பயிரை தன் நிலத்தில் வளர சம்பதிப்பானா?
ஒவ்வொரு நாடும் இதில் கண்ணும் கருத்துமாய் இருக்கின்றன
அக்காலத்தில் தன் குடி போக மற்றகுடிகளை அடிமையாக்கும் வழக்கம் இருந்தது, சிலர் வளமெல்லாம் எம் மக்களுக்கே என புறநாட்டு மக்களை கொன்றே போட்டார்கள்
கண்முன் கண்ட வரலாறு ஹிட்லர்
இந்த நூற்றாண்டில் ஒவ்வொரு நாடும் தன் மக்களை பாதுகாக்க படாதபாடு படுகின்றது. அடுத்த நாட்டு மக்கள் வந்து தங்கள் நாட்டு வளங்களை, தன் மக்களுக்கான நலதிட்டத்தை பங்கு போடுவதை எந்நாடும் விரும்பாது
செல்வ செழிப்பான அமெரிக்கா மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்டுகின்றதே ஏன்?
பரப்பளவில் மிக பெரியதும் உலக மகா பணக்கார நாடே தயங்குகின்றதே ஏன்? செல்வ வளமா சிக்கல்? இல்லை விஷயம் வேறுமாதிரியானது
மிக பரந்த ஆஸ்திரேலியா அடுத்த நாட்டு மக்களை கொத்தாக ஏற்கட்டும் பார்க்கலாம்?
ஐரோப்பிய நாடுகளிடம் இல்லா செல்வமா? ஆனால் சிரிய அகதிகளை எந்த நாடு ஏற்றது? சில ஆயிரங்களை கூட ஏற்கமறுத்து எல்லை மூடினார்கள்
சவுதி முதலான நாடுகள் ஏற்றதா? இல்லை
ஆம் எந்த ஒரு நாடும் இன்னொரு நாட்டு குடிமக்களை ஏற்காது, உலக யதார்த்தம் அது
தன் மக்களுக்கான நலதிட்டங்களை இன்னொரு நாட்டு மக்களுக்கு எந்த நாடும் கொடுக்காது
இந்தியா முன்பே செய்யவேண்டிய சட்டத்தினை மிக தாமதமாக செய்திருக்கின்றது, இது வரவேற்கதக்க விஷயம்
பாஜக அரசு இல்லையேல் இதுவும் சாத்தியமில்லை
நாட்டுக்கு மகா அவசியமான சட்டத்தை செய்திருக்கின்றார்கள், அதனிலும் மகா முக்கியமாக கவனிக்கவேண்டியது ஈழதமிழருக்கு குடியுரிமை இல்லை என சொன்னது
ஆம் ஈழதமிழருக்கு குடியுரிமை என்ற பல்லவியினை பாடியது திமுக, தொடர்ந்து ஈழ அழிச்சாட்டிய கும்பலும் சில வருடங்களாக பாடின
அவர்கள் கன்னத்தில் ஓங்கி அடித்திருக்கின்றது அரசு
அவர்கள் யுத்தமென ஓடிவந்தார்கள், இப்போதைய அமைதியான சூழலில் அவர்கள் திரும்பி செல்வதுதான் சரி, அதுதான் அவர்களின் நாடு
ஈழதமிழர் என்றல்ல, இந்நாட்டு குடிமக்களுக்குரிய உரிய ஆவணம் இல்லாதவர்களை சம்பந்தபட்ட நாட்டுக்கு அனுப்பவேண்டும், அந்நாட்டு மக்களுக்கு அவர்கள் நாடுதான் பொறுப்பு.
காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து அடுத்த மாபெரும் நல்லவிஷயத்தை செய்திருக்கின்றது இந்த அரசு, இம்மாதிரியான நல்ல விஷயங்கள் தொடரட்டும்