நித்திசாமி ஒருநாளும் பாலியல் வழக்கில் தீர்ப்பில் சிக்கவே மாட்டார்
நித்திசாமி ஒருநாளும் பாலியல் வழக்கில் தீர்ப்பில் சிக்கவே மாட்டார், ஆம் அவர்மேல் ஆயிரம் சர்ச்சை சொல்லலாம் ஆனால் கற்பழிப்பு வழக்கு என்றால் நிரூபிக்கவே முடியாது
ஆம், தவத்திலும் தியானத்திலும் இருப்பவனுக்கு பாலியல் உறவே அவசியமில்லை என்பது யோக சித்தில் நிரூபிக்கபட்ட ஒன்று, இந்த விஷயத்தை விட யோகம் ஆயிரம் மடங்கு அள்ளி கொடுக்கும்.
யோகத்தில் விழுந்த மனம் பெண்ணை நாடாது. வானலோகத்து மங்கையே வந்து நின்றாலும் தள்ளி நில்லம்மா என்றுதான் சொல்ல சொல்லும்.
இதனால் கற்பழிப்பு மற்றும் பாலியல் வழக்கு நீதிமன்றத்தில் நிற்காது, நித்தி பெண் சீடர்களும் துணிந்து கன்னிதன்மையினை நிரூபிக்க தயார் என சொல்வது இதனால்தான்
நித்தி வேறு ஏதோ பண வரவு செலவில் சிக்கியிருக்கலாம்
மறைப்பதற்கு ஒன்றுமில்லை, சில ஆசிரமங்கள் கருப்பு பணத்தின் புதையல். எந்த வருமானவரிதுறையும் கைவைக்கமுடியா இடம், அதன் பாதுகாப்பு அப்படி

ஆக ஏதோ பெரும் புள்ளியின் பல மில்லியன் டாலர் பணம் நித்தியிடம் சிக்கியிருக்கின்றது, நித்திக்கும் அவர்களுக்கும் இடையில் அது சம்பந்தமாக மோதல் வெடித்துவிட்டது
அவர்களால் அந்த பல்லாயிரம் டாலர் பணத்தை வெளியில் சொல்லமுடியாது, மாறாக இப்படி இழுத்துவிடத்தான் முடியும்
மிக தேர்ந்த சாமியான நித்தி ஆடும்வரை ஆடலாம் எல்லாம் தனக்கு லாபம், நிச்சயம் தன் மேல் பணமோசடி வழக்கு போடமுடியாது, இத்தனை மில்லியன் டாலரை கொடுத்தேன் என எப்படி ஒருவன் சொல்லமுடியும்?
அதனால் அப்படி சொல்லமாட்டார்கள், பாலியல் வழக்கே தொடுப்பார்கள் அது நிச்சயம் நிற்காது என்பதால் அச்சமில்லை என மந்தகாச புன்னகை வீசுகின்றார்
ஏதோ பெரும் செல்வாக்கு மிக்க மறைமுக சக்தியினை எதிர்த்து நிற்கின்றார் நித்தி
அந்த விளையாட்டுத்தான் நடக்கின்றதே தவிர வேறொன்றுமில்லை, இருந்து பாருங்கள் இன்னும் கொஞ்சநாளில் சத்தமில்லாமல் விஷயம் அடங்கிவிடும்