ஈரானும் அமெரிக்காவும் தாங்கள் பிடித்து வைத்திருந்த உளவாளிகளை ஒப்படைத்து பரிமாறிகொண்டன‌

என்னதான் முறைத்து கொண்டாலும் ஈரானுக்கும் அமெரிக்காவுக்குமான சண்டை இந்த திமுக பாஜக உரசல் போன்றது, வெளியேதான் சீறுவார்கள் திரைமறைவில் ஹிஹிஹி என சிரித்துகொண்டு ஆளாளுக்கு காரியம் சாதிப்பார்கள்

அப்படி ஈரானும் அமெரிக்காவும் தாங்கள் பிடித்து வைத்திருந்த உளவாளிகளை ஒப்படைத்து பரிமாறிகொண்டன‌

சத்தமில்லாமல் சுவிஸ் மூலம் பரிமாறி கொண்ட அவர்கள், அடுத்து எங்களிடம் மோதினால் என சவால்விடவும் தவறவில்லை

திமுக பாஜகவின் இடையே ரகசிய நடுவராக யார் பணியாற்றுகின்றார் என தெரியவில்லை ஆனால் ஈரான் அமெரிக்கா இடையே சுவிஸ் இருக்கின்றது

இதை எல்லாம் பார்த்துகொண்டிருக்கும் வடகொரியா தென்கொரியாவினை இப்படி நடுவில் போட பார்த்தது, தைவான், ஜப்பான் என முயன்றது யாரும் வரவில்லை. இதனால் கடுப்பாகிவிட்டது வடகொரியா

அமெரிக்க அதிபர் தன் நாட்டு மக்களுக்கு விடுமுறை மற்றும் புத்தாண்டு வாழ்த்து சொல்லும் பொழுது யோகி பாபு ஸ்டைலில் உள் நுழைகின்றார் வடகொரிய அதிபர், புகுந்து ” அந்த கிழவர நம்பாதீங்க, அவருக்கு மனநலம் சரியில்லை, அடுத்த வருஷம் உங்களுக்கு நிம்மதியா இருக்காது” என சொல்லிவிட்டார்

இதென்ன என அதிர்ந்த டிரம்ப் “டேய் ராக்கெட்மேன், யாருகிட்ட என்ன பேசுற” என திருப்பி கேட்டால் .

அதே யோகிபாபு ஸ்டைலில் “இங்கபாரு கிழவா உன்கிட்ட பேச ஒண்ணுமில்ல, இன்னும் 20 நாள் டைம் , அதுக்குள்ள ஒரு முடிவுக்கு வரல, உன் நாடு சந்தோஷமா கொண்டாடுற கடைசி கிறிஸ்மஸ் இதுதான்” என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்

20 நாளில் அமெரிக்கா வழிக்கு வராவிட்டால் என்னாகும்?

ஒன்றுமில்லை அமெரிக்கர் கொண்டாடும் கடைசி சந்தோஷ கிறிஸ்மஸ் 2020ம் ஆண்டுக்கு மாறும், அவ்வளவுதான் விஷயம்