தப்பி பிழைத்திருக்கின்றது பாரதம்

மறுபடியும் தேசவிரோத குழப்ப அரசியலை ஆரம்பித்துவிட்டன இந்த காங்கிரஸ் திமுக‌ உள்ளிட்ட அழிச்சாட்டிய கோஷ்டிகள், ஆம் குடியுரிமை திருத்த மசோதாவினை ஏற்கமாட்டார்களாம்

அது இந்நாட்டின் சிறுபான்மையினருக்கு பாதிப்பாம்

அது எப்படி இந்நாட்டு சிறுபான்மைக்கு பாதிப்பு? இந்நாட்டின் குடிமக்களை யார் வெளியே தள்ளுகின்றார்கள்? அந்நிய நாட்டினரை அவர்கள் நாட்டுக்கு போ என சொல்வது எப்படி தவறாகும்?

அவர்கள் மேல், அந்நிய நாட்டு மக்கள் மேல் இவர்களுக்கு ஏன் இப்படி ஒரு அக்கறை?

அது என்னவோ தெரியவில்லை, உள்நாட்டினரை விட வெளிநாட்டவர் மேல் இவர்களுக்கு எப்பொழுதும் கடும் அக்கறை, அது ஏன்?

இந்நாட்டு மக்களுக்கான நலதிட்டமும் சலுகையும் பறிபோகின்றது என கத்தும் பொழுது, அதெல்லாம் இல்லை அடுத்த நாட்டு மக்களுக்கும் கொடு ஏன் கொஞ்சமும் புத்தியின்றி பேசுகின்றார்கள்?

விஷயம் வேறொன்றுமில்லை

இவர்கள் இந்நாட்டுக்காக அல்ல மாறாக வெளிநாட்டு சக்திகளின் நலனுக்கு கட்சி நடத்துகின்றார்கள், அவர்கள் சொன்னதை எல்லாம் செய்வார்கள்

இதனால் காஷ்மீரை எதிர்ப்பார்கள் இன்னும் பலவற்றை எதிர்ப்பார்கள், குடியுரிமை மசோதா என்றாலும் எதிர்ப்பார்கள்

கட்சியின் மறைமுக அடிப்படை கொள்கை அதுதான் என்றால் பின் எதை செய்வார்கள்?

இப்பொழுதெல்லாம் காங்கிரஸ் மற்றும் திமுகவின் உண்மை முகங்கள் தெரிகின்றன, இவ்வளவு ஆபத்தான கட்சிகளா இங்கு ஆண்டன? என மாபெரும் அச்சம் மேலோங்குகின்றது

தப்பி பிழைத்திருக்கின்றது பாரதம்