பெரும் பரபரப்பாக வரவேண்டிய விஷயம் தமிழகத்தில் வரவே இல்லை

பெரும் பரபரப்பாக வரவேண்டிய விஷயம் தமிழகத்தில் வரவே இல்லை, மீடியாக்களும் மகா அமைதி, அட ஈழகோஷ்டிகள் அட்டகாசமாக ஆடவேண்டிய நேரம் அவையும் மரண அமைதி அல்லது மரண பயம்

ஆம் நடந்திருக்கும் விஷயம் அப்படியானது, விஷயத்தை இலங்கை ஊடகம் மட்டும் சொல்கின்றது

அதாவது சினிமாகாரர்களும் அரசியல்வாதிகளும் மட்டும் குத்தக்கு எடுத்திருக்கும் விஷயம் தமிழுணர்வு மற்றும் ஈழதமிழர் அல்ட்ராசிட்டி

இதில் சைமன், கவுதமன், அமீர், மு.களஞ்சியம் என சில இயக்குநர்களும் உண்டு. இதில் மு.களஞ்சியமே இந்த விஷயத்தின் நாயகர்

அன்னார் மாவீரர் தினம் நடத்த யாழ்பாணம் சென்றிருக்கின்றார், முதலில் இவரை உள்ளே விட்ட சிங்களதரப்பு பின்னாலே சுற்றியிருக்கின்றது

அன்னார் யாழ்ப்பாணத்தில் வீர உரை, முள்ளிவாய்க்காலில் கண்ணீர் அஞ்சலி என பல டிராமக்களை போட்டுகொண்டிருந்தபொழுதே இவரின் முழு ஜாதகம் இலங்கை ரகசிய போலீஸ் தரப்பிடம் சென்றிருக்கின்றது

முதலில் ஏதோ திட்டத்துடன் உள்ளே அனுப்பியிருக்கின்றார்கள் பின் ஓடவிட்டு பிடித்திருக்கின்றார்கள், அவரிடம் விசாரணை மிக பலமாய் இருந்திருக்கின்றது

யார் அனுப்பியது? எதற்காக வந்தாய்? என கேட்ட கேள்விக்கு தான் ஈழ அபிமானி எனவும் தனக்கும் தமிழக அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என அவர் சொன்னபொழுது முன்னால் சில படங்களை தூக்கிபோட்டு பார்க்கசொல்லி சாத்தியிருக்கின்றார்கள்

ஆம், படத்தில் அவர் அங்கிள் சைமனோடு சிரித்துகொண்டிருந்தார்

இவனா உன்னை அனுப்பியது? முன்னோட்டம் பார்க்க அனுப்பினானா? என கேட்டு அடித்திருக்கின்றார்கள், அடி விழுந்தது என்றுதான் இலங்கை ஊடகம் சொல்கின்றது

அன்னாரை யாழ்பாணத்தில் இருந்து ராணுவ விமானத்தில் ஏற்றி, கொழும்பு கொண்டுவந்து பாஸ்போர்ட்டில் சிகப்பு முத்திரை குத்தி அவசரமாக சென்னைக்கு அனுப்பிவிட்டார்கள்

வந்தவர் , சுவற்றில் அடித்த பந்துபோல் மருத்துவமனையில் இருக்கின்றார்

இது பற்றி தகவல் தெரிந்தும் தமிழக ஊடகமும், தமிழக அரசியல்வாதிகளும் கனத்த அமைதி காக்கின்றனர்

ஏன் என்பது தெரியவில்லை, இந்திய அரசு மறைக்கின்றதா? இல்லை அனுப்பியர்கள் பெயர் வெளிவந்துவிடும் அச்சமா என்பதுதெரியவில்லை

வைகோ உள்ளிட்ட ஈழ இம்சைகளும் அமைதி, சைமனும் மகா அமைதி

சைமன் களஞ்சியத்தை பார்க்க செல்லவில்லை , ஒருவேளை பார்க்க சென்றால் அவரை அனுப்பியது சைமன் என தெரிந்தால் என்னாகும்?

இவ்வளவு நடந்தும் களஞ்சியம் தரப்பு மகா அமைதி, இலங்கை தமிழனை சிங்கள பிச்சைக்காரன் திட்டினாலே பொங்கும் இத்தரப்பு, தமிழக தலைவன் தர்ம அடி வாங்கிவந்த நிலையிலும் அமைதி

ஏன்?

விஷயம் இருக்கின்றது, இங்கு இத்தரப்பு சீறினால் யாழ்பாணத்தில் இவரை அழைத்து வந்தவர்களை இலங்கை தரப்பு போட்டு சாத்தி தமிழகத்துக்கே அனுப்பிவிடும்

இதனால் எல்லோரும் கனத்த அமைதி

விஷயத்தை உறுதிபடுத்துபவர் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் “அவருக்கு இங்கு உயிர் ஆபத்து இருந்ததால், தேவை இல்லாமல் சிக்கிகொண்டதால் திருப்பி அனுப்பினார்கள்” என சொல்லியிருக்கின்றார்

ஆக களஞ்சியம் இலங்கை சென்று அடிவாங்கி வந்தது உறுதி செய்யபடுகின்றது, களஞ்சியம் தரப்பும் நாம் சில விஷயங்களை சொன்னால் ஈழம் வாழ் தமிழருக்கும் எம்மை அனுப்பியவருக்கும் சிக்கல் என்கின்றார்

ஆக ஒரு தமிழனை சிங்களன் புரட்டி எடுத்திருகின்றான் அதை வெளியில் கூட சொல்லமுடியா அளவு தமிழக ஈழ அழிச்சாட்டிய கும்பல் வாய்பொத்தி நிற்கின்றது

அதுவும் சைமன் படத்தை காட்டி காட்டி அடித்திருகின்றான் என்றபின் சைமனும் தும்பிகளும் கூட்டுதற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளபட்டிருப்பது மகா சோகம்

ஏன் அங்கிள் சைமன் கோஷ்டி வாய்திறக்கவில்லை?

களஞ்சியத்தை போட்டு நொறுக்கும் பொழுதே இலங்கை இந்திய அரசுக்கு “இங்கு தீவிரவாதத்தை ஊக்குவிக்க வந்தவனை போட்டு அடிக்கின்றோம், இவனின் கூட்டாளிகள் படத்தில் இருப்பவர்கள், அதனால் தீவிரவாத தடுப்பு ஒப்பந்தபடி இவனின் கூட்டாளிகளை எம்மிடம் தர நாம் கோரு சூழல் வந்தால் தந்துவிட வேண்டும்” என சில சமிக்ஞைகள் டெல்லிக்கு வந்ததாக சொல்கின்றார்கள்

ஆம் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகள் கொழும்பில் பிடிபடும் பொழுது இலங்கை ஒப்படைத்தது, அதுபோல இலங்கைக்கு எதிரானவர்களையும் இந்தியா கொடுத்தல் வேண்டும் இல்லையேல் காஷ்மீர தீவிரவாதிகளை அழைத்துவந்து இலங்கை கறிபோட்டு வளர்க்கும்

களஞ்சியம் நொறுக்கபடுவதை சில பாதுகாப்பு அமைப்புகள் சம்பந்தபட்டவர்களுக்கு லைவில் காட்டியதாகவும், அதை பார்த்த கோஷ்டிகள் “ஆத்தாடி என்னா அடி..” என வாய்பொத்தி நின்றதாகவும் சில உறுதிபடுத்தபடாத செய்திகள் சுற்றுகின்றன‌

இவை எல்லாம் தமிழக ஊடகத்தில் வரவில்லை, சர்வதேச ஊடகத்தில் வந்தன. உங்கள் பார்வைக்கு தந்துவிட்டோம். இனி களஞ்சியத்தை கண்டறிந்து செய்தியினை வாங்குவது அவரவர் பொறுப்பு

முடிந்தால் வாங்குங்கள்

களஞ்சியம் அடிவாங்கிய தகவல் களஞ்சியம் டெல்லியில் இருக்கும் அதை பார்த்துவிட்டு எவனாவது ஒரு பத்திரிகையாளன் களஞ்சியம் கலைந்து கிடந்த கதையினை கொண்டுவரட்டும் பார்க்கலாம்

முடியாது, காரணம் இங்கு உருப்படியான பத்திரிகையாளன் என எவனுமே இல்லை. தமிழக பத்திரிகை தமிழக அரசியல் சினிமா என மிக மிக குறுகிய வட்டத்தில் சிக்கி நாசமாயிற்று, அங்கு ஒரு பத்திரிகையாளனும் இதை வெளிகொணரமுடியாது